ஆதாருடன் வோட்டர் iD லிங்க் செய்யவில்லையா இந்த தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.

HIGHLIGHTS

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது

இப்போது அரசாங்கம் இந்த காலக்கெடுவை 31 மார்ச் 2024 வரை நீட்டித்துள்ளது.

வோட்டர் ஐடி மற்றும் ஆதார் கார்டை எப்படி லிங்க் செய்வது?

ஆதாருடன் வோட்டர் iD லிங்க் செய்யவில்லையா இந்த தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கான காலக்கெடு 2023 மார்ச் 1ஆம் தேதியை அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இப்போது அரசாங்கம் இந்த காலக்கெடுவை 31 மார்ச் 2024 வரை நீட்டித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பயனர்களுக்கு ஒரு வருடம் கூடுதல் நேரம் உள்ளது. இதன் போது, ​​பயனர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை ஆன்லைனில் இணைக்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனால் என்ன நன்மை.

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்த பிறகு, போலி வாக்களிப்பை தடுக்க இது உதவும். இது ஒரு தன்னார்வ விதி என்றாலும். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்காவிட்டால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று அர்த்தமில்லை. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்காத குடிமக்களிடமிருந்து வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தால் நல்லது.

வோட்டர் ஐடி மற்றும் ஆதார் கார்டை எப்படி லிங்க் செய்வது?

* முதலில் nvsp.in பக்கத்துக்கு செல்லவும் 
* இப்போது போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள விவரங்களை உள்ளிடவும்.
* இப்போது Feed Adhaar No வலது பக்கத்தில் காணப்படும், அதைக் கிளிக் செய்து விவரங்களையும் EPIC எண்ணையும் உள்ளிடவும்.
* இதற்குப் பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு வரும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாளத்தை இணைப்பது குறித்த அறிவிப்பு ஸ்க்ரீனில் தோன்றும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் வாக்காளர் ஐடி இணைப்பது எப்படி?

ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் செயல்முறையை எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிக்க முடியும். இதற்கு, ECILINK< SPACE> என்ற வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ECILINK-க்குப் பிறகு, உங்கள் EPIC எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo