Google, G Payக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை.

Google, G Payக்கு ரிசர்வ் வங்கியின்  அங்கீகாரம் தேவை இல்லை.
HIGHLIGHTS

கூகுள் பே’ (ஜிபே), ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இல்லாமல் கட்டண

ஜிபே செயலியானது, கட்டண முறைமை ஆபரேட்டர் இல்லை. மாறாக 3-ம் நபர் பயன்பாட்டு வழங்குனர்.

கூகுள் நிறுவனத்தின் கட்டண பரிமாற்ற செயலியான ‘கூகுள் பே’ (ஜிபே), ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறைமை வழங்குநராக செயல்படுவதாகவும், இது கட்டணம் மற்றும் தீர்வு சட்டத்துக்கு எதிரானது எனவும் பொருளாதார நிபுணரான அபிஜித் மிஸ்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி டிஎன் படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த பிரமாணபத்திரம் மீது பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதில், ‘ஜிபே செயலியானது, கட்டண முறைமை ஆபரேட்டர் இல்லை. மாறாக 3-ம் நபர் பயன்பாட்டு வழங்குனர். எனவே ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இதற்கு தேவை இல்லை. கூகுள் பே போன்ற மூன்றாம் நபர் பயன்பாட்டு வழங்குனர்கள் அதன் சேவை நெட்வொர்க்கில் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு, யுபிஐ நெட்வொர்க், அங்கீகாரம் அளிக்கிறது’ என குறிப்பிட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo