இனி பெட்ரோல் டீசல் தேவை இல்லை வந்துவிட்டது எலக்ட்ரிக் கார்…!

HIGHLIGHTS

நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு நாம் மிகவும் பயனுள்ளதாக இருக்க இப்பொழுது வந்து விட்டது எலக்ட்ரிக் கற் தொழில் நுட்ப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது இதன் மூலம் நமக்கு நன்றாகவே தெரிகிறது

இனி பெட்ரோல்  டீசல் தேவை இல்லை  வந்துவிட்டது  எலக்ட்ரிக் கார்…!

நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு நாம் மிகவும் பயனுள்ளதாக இருக்க இப்பொழுது வந்து விட்டது எலக்ட்ரிக் கற்  தொழில் நுட்ப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  என்பது  இதன் மூலம் நமக்கு நன்றாகவே தெரிகிறது முதலில் நாம்  நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு நிலக்கரியில் இயங்கிய நீராவி என்ஜின் பொருத்திய ரெயில்களில் பயணம் செய்தோம். நீராவி என்ஜின் கொண்ட ரெயில்கள் அதிகளவு கரித்துகள்களை வெளியிட்டதில் இருந்து டீசல் என்ஜின்கள் நம்மை மீட்டெடுத்தன. டீசல் என்ஜினிலும் சுற்றுச்சூழல் மாசுஇருந்ததால் தற்பொழுது மின்சார ரெயில் கண்டுபிடிக்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆரம்பக் காலத்தில், சென்னை நகரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரித்து இருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசு கொஞ்சம் குஅறிந்துள்ளது என்று சொல்லலாம் 

இருப்பினும் இப்பொழுது பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல் டீசல் இயக்கி வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலும்  அதிகம் காணப்படுகிறது இதனுடன்  சுற்று சூழல் மாசு அதிகரித்த வருகிறது இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க மின்சாரம்  மூலம்  வாகனங்களை இயக்கம் புதிய முயற்சியை அரசு எடுத்துள்ளது இதன் மூலம் நாம்  இப்போரில் மிச்ச படுத்தலாம் இதனுடன் இது . இதற்கு 2030-ம் ஆண்டிற்குள் இயக்கப்படும் குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன. ஹூண்டாய், ரெனால்ட், டொயோட்டா, சுசுகி, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் 2020-ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிப்பு வேலையில் இறங்கியுள்ளன.

டொயோட்டாவும், சுசுகியும் சேர்ந்து இந்தியாவுக்கான மின்சார கார்களை தயார் செய்கின்றன. இதற்கான தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்க, சுசுகி நிறுவனம் கார்களை வடிவமைக்கும் பணிகளை ஏற்று இருக்கிறது.

ரெனால்ட் நிறுவனம் சீனச்சந்தையில் விற்பதற்காக குறைந்த விலையிலான எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. ‘ரெனால்ட் க்விட்’ எனப்படும் இந்த காருக்கு சீனச்சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படும்.

மஹிந்திரா நிறுவனம் KUV100 மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை உருவாக்கி வருகிறது. இதன் டெஸ்ட்களும் வெற்றிகரமாக முடிந்தது இந்த ஆண்டே கார் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, ‘XUV500’ என்ற மாடல் எலெக்ட்ரிக் காரையும் மஹிந்திரா தயாரிக்கிறது.

டாடா நிறுவனம், டாடா டிகோர், டாடா டியாகோ ஆகிய இரு மாடல் மின்சார கார்களை உற்பத்தி செய்கிறது. இவை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் (ஹுண்டாய் கோனா) பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இதை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது போன்ற கார்கள் வந்துவிட்டால் நமக்கு பெட்ரோல் டீசலுக்கு வேலையே இருக்காது இதனுடன் பெட்ரோல் டீசல் விலை ஏற்றினாலும்  நாம்  கவலை படுவதில்லை 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo