ஃபேஸ்புக்கை முந்திய கூகுள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இது மிக பெரிய சாதனையாகும்.

ஃபேஸ்புக்கை முந்திய கூகுள் 5 ஆண்டுகளுக்கு  பிறகு  இது மிக பெரிய  சாதனையாகும்.
HIGHLIGHTS

கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது நான்காவது காலாண்டில் டவுன்லோடுகள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சர்ச் (தேடுப்பொறி)  நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது.

 முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது

இந்த ஆய்வில் கடந்த ஒரு வருட கணக்கில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. கூகுள் செயலிகளை சுமார் 230 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலின் ஐந்தில் நான்கு செயலிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமாக இருக்கின்றன. இவற்றில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இருக்கின்றன. 

கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது நான்காவது காலாண்டில் டவுன்லோடுகள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் டிக்டாக் வருவாய் 2018 நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 540 தவீதம் அதிகரித்து இருக்கிறது. 

பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி கடந்த ஆண்டின் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2019 நான்காவது காலாண்டில் டிக்டாக் டவுன்லோடுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo