Google Pixel Watch 5 மற்றும் Pixel Buds Pro 2 அறிமுகம், டுயல் சிப், மிக அப்க்ரேட் சிறந்த ஹெல்த் அம்சம் கொண்டுள்ளது

Google Pixel Watch 5 மற்றும் Pixel Buds Pro 2 அறிமுகம், டுயல் சிப், மிக அப்க்ரேட் சிறந்த ஹெல்த் அம்சம் கொண்டுள்ளது

நாம் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த Google Pixel 11 சீரிஸ் அபிமுகம் செய்தது. இதில் Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL மற்றும் Pixel 11 Pro Fold ஆகிய போங்கள் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் Pixel Watch 5 மற்றும் Pixel Buds Pro 2 அப்க்ரேட் உடன் கொண்டு வரப்பட்டது,, இப்பொழுது Pixel Watch 5 மற்றும் Pixel Buds Pro 2 விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel Watch 5 சிறப்பம்சம்.

Google Pixel Watch 5 வாட்சில் ப்ரோடேக்டிவ் அசிஸ்டன்ஸ் மற்றும் அட்வான்ஸ்ட் ஹெல்த் ட்ரேக்கிங் போன்ற அம்சம் கொண்டிருக்கும். இதனுடன் இந்த Google Pixel Watch 5 வாட்சில் 3,000-nit அக்குவா ப்ரைட்னஸ் 360டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது, கூகிள் மேலும் 11 புதிய, எளிதில் பார்க்கக்கூடிய காம்ப்ளிகேஷன் ஸ்டைல்களையும், இரண்டு புதிய வாட்ச் ஃபேஸ்களையும், பயனரின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு பர்சனலைஸ்ட் ஜெனரேட்டிவ் வாட்ச் ஃபேஸ்களையும் சேர்த்துள்ளது.

இது 3,000 நிட்ஸ் (nits) வரையிலான அதிகபட்ச பிரகாசம், 320ppi பிக்சல் டென்சிட்டி , 60Hz வரையிலான அடாப்டிவ் (adaptive) ரெப்ராஸ ரெட் மற்றும் ‘ஆல்வேஸ்-ஆன்’ (always-on) டிஸ்ப்ளே வசதி கொண்ட, கர்வ்ட் எட்ஜ்களைக் கொண்ட Actua 360 AMOLED LTPO ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதன் ஸ்க்ரீன் , கீறல்களைத் தாங்கக்கூடிய பிரத்யேகமான கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதில் மிக பெரிய அப்க்ரேட் உடன் டீப் Gemini இன்டிக்ரேஷன் வாச்தியுடன் வருகிறது. பயனர்கள் தங்கள் கையை உயர்த்துவதன் மூலம் ஜெமினியுடன் பேசலாம் என்றும், அதே நேரத்தில் ஜிமெயில் மற்றும் காலண்டர் போன்ற கூகிளின் சொந்த சேவைகளிலிருந்து கான்டேக்ட் தகவல்களை முன்கூட்டிய நோட்டிபிகேஷன் வழங்கும் என்றும் கூகிள் கூறுகிறது.

இதன் உள்ளமைப்பில், குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 Gen 2 Accelerated பிளாட்ஃபார்ம் மற்றும் Cortex-M55 கோ-பிராசஸர் (co-processor) ஆகியவை இடம்பெற்றுள்ளன. நிறுவனத்தின் தகவலின்படி, இந்த இரட்டைச் சிப் (dual-chip) கட்டமைப்பு, Pixel Watch 4-உடன் ஒப்பிடுகையில் 20 சதவீத செயல்திறன் மேம்பாட்டையும், 50 சதவீத கூடுதல் ரேம் (RAM) மற்றும் 12 சதவீத CPU வேக அதிகரிப்பையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 64GB eMMC இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது.

உடல்நலக் கண்காணிப்பைப் பொறுத்தவரை, பிக்சல் வாட்ச் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib) கண்டறிதலுடன் கூடிய ECG, உயர் மற்றும் குறைந்த ஹார்ட் பீட் எச்சரிக்கைகள், ஓய்வு நேர ஹார்ட் பீட் கண்காணிப்பு, (SpO2), இதயத் துடிப்பு மாறுபாடு (HRV), சுவாச விகிதம், தோல் வெப்பநிலை மாறுபாடு மற்றும் நிகழ்நேர மன அழுத்தக் கண்காணிப்பு ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. தூக்கக் கண்காணிப்பு அம்சங்களில் சுவாச ஒழுங்குப் பகுப்பாய்வு மற்றும் கஷ்டமைஸ் செய்யப்பட தூக்க மதிப்பெண் ஆகியவை அடங்கும்.

இதில் குருப்பிடதக்க புதிய அம்சத்தின் கீழ் ஹெல்த் கார்டியன் சேர்க்கப்பட்டுள்ளது இது மாதம் தோறும் ப்ளட் ப்ரசரை கண்காணிக்கிறது, தூக்கம், பிரீதிங் குவாலிட்டி மற்றும் இன்சூலின் ரெசிஸ்டன்ஸ் ரியல் டைம் கிளினிகல் ரீடிங் போன்ற மிக சிறந்த அம்சம் வழங்கப்படுகிறது.

மற்றொரு புதிய அம்சம் சுவாச அவசரநிலை (எமர்ஜன்சி டிடக்ஷன்)கண்டறிதல் ஆகும், இதை ஒரு ஸ்மார்ட்வாட்ச்சிற்கான இந்தத் துறையின் முதல் அம்சம் என்று கூகிள் தெளிவுப்படுத்தியுள்ளது . இது சாதனத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவுடன் (AI) இணைந்து PPG, முடுக்கமானி மற்றும் காற்றழுத்தமானி சென்சார்களைப் பயன்படுத்தி, ஆக்ஸிஜன் செறிவில் ஏற்படும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான சரிவுகளைக் கண்காணிக்க முடியும்.

கூகிளின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச், 50-க்கும் அப்டேட் செய்யப்பட்ட செயல்பாடுகளை சப்போர்ட் செய்வதோடு , நிகழ்நேர லைட் மற்றும் காட்சி வழிகாட்டுதல், வாராந்திர கார்டியோ இலக்குகள் மற்றும் தினசரி தயார்நிலை மதிப்பெண் ஆகியவற்றையும் வழங்குகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட இரட்டை அதிர்வெண் ஜிபிஎஸ் உள்ளது,

41mm பிக்சல் வாட்ச் 5, 30 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் எனக் கூறப்படுகிறது, அதே சமயம் 45mm மாடல் ஒரே சார்ஜில் 40 மணிநேரம் வரை செயல்படும். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று கூகுள் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Google Pixel Buds Pro 2 அம்சம்.

பிக்சல் பட்ஸ் ப்ரோ 2, டைனமிக் ANC உட்பட பல புதிய அம்சங்களைப் வழங்குகிறது . இது, இயர்பட்ஸின் பொருத்தத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை ஈடுசெய்யும் வகையில், இரைச்சல் நீக்கத்தைத் தானாகவே சரிசெய்கிறது.

இந்த இயர்பட்ஸ்களில் இப்போது ஜெமினி ஆடியோ கண்ட்ரோல் வசதி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி இயர்பட் அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, பயனர்கள் தங்கள் ஃபோனை எடுக்காமலேயே, “ஹே கூகுள், பேஸை அதிகரி” என்று கூறி ஆடியோவை சரிசெய்யலாம். மேலும், இந்த இயர்பட்ஸ்கள் பிக்சல் வாட்ச்சுடன் இணைந்து செயல்பட்டு, பயனர் தூங்கும்போது அதைக் கண்டறிந்து தானாகவே இசையை ம்யூட்செய்யும்..

இதையும் படிங்க:Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போன் எல்லாம் இருக்கு பாருங்க

Google Pixel Watch 5 மற்றும் Pixel Buds Pro 2 விலை தகவல்

இந்தியாவில் கூகுள் பிக்சல் வாட்ச் 5 மற்றும் மேம்படுத்தப்பட்ட பட்ஸ் ப்ரோ 2-இன் விலை
கூகுள் பிக்சல் வாட்ச் 5-இன் 41mm மாடல் ரூ. 42,900-க்கும், 45mm மாடல் ரூ. 45,900-க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிக்சல் பட்ஸ் ப்ரோ 2-இல் ஆர்வம் உள்ள வாங்குபவர்கள் அதை ரூ. 22,900-க்கு வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile