Oppo Pad Mini இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், 8.8-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்

HIGHLIGHTS

Oppo அதன் புதிய டேப்லெட் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்

இந்த டேப்லெட், Oppo Pad 5 Pro-வுடன் இணைந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Oppo Pad Mini-யின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள்

Oppo Pad Mini இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், 8.8-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்

சீனா ஸ்மார்ட்போன் ப்ரேண்டான Oppo அதன் புதிய டேப்லெட் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். Oppo Pad Mini-யின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த டேப்லெட், Oppo Pad 5 Pro-வுடன் இணைந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகவுள்ள Oppo Pad Mini-யின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள், அதன் சீனப் வெர்ஷனை போலவே இருக்கக்கூடும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Pad Mini யில் இருக்கும் அம்சங்கள் என்ன

X தளத்தில் தொடர்ச்சியான போஸ்ட்கள் மூலம் , Oppo Pad Mini மேட் டிஸ்ப்ளே எடிஷன், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மொபைல் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் என்றும், 8,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் ஒப்போ வெளிப்படுத்தியுள்ளது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கண்ணை கூசும் வெளுச்சதை குறைக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது, மேட் டிஸ்ப்ளே ஆகியவற்றையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவரங்கள் சீன மாடலின் முக்கிய அம்சங்களுடன் பொருந்துகின்றன. இருப்பினும், இந்திய மாடலிலும் அதே சார்ஜிங் வேகம் மற்றும் மெமரி ஸ்டோரேஜ் இருக்குமா என்பதை ஒப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Oppo Pad Mini டேப்லெட்டில் 8.8-இன்ச் 2.5K OLED மேட் டிஸ்ப்ளே இடம்பெறும். இந்த மேட் ஸ்க்ரீன் , கண் கூச்சத்தைக் குறைத்து, எழுதும் போது காகிதம் போன்ற உணர்வைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும், டிஸ்ப்ளேயைச் சுற்றி 2.99 mm மெல்லிய பெசல்கள் இருப்பதையும் ஓப்போ வெளிப்படுத்தியுள்ளது.

ஓப்போ பேட் மினியின் சீனப் வெர்ஷன் , ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்OS 16-ல் இயங்குகிறது. இதில், 3.8GHz வரை வேகத்தில் இயங்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 829 ஜிபியூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்தியாவிற்கான மெமரி மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களை ஓப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கேமரா பிரிவில், ஓப்போ பேட் மினியின் சீன மாடலில் 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. இது வினாடிக்கு 30 பிரேம்கள் வேகத்தில், 4K ரெசல்யூஷன் வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது. தற்போதுள்ள மாடல் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இருப்பினும் இந்திய மாடலிலும் இதே சார்ஜிங் ஸ்பீட் இருக்குமா என்பதை ஓப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க:பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த டாப் எண்டு போனில் ஒரே அடியாக ரூ, 45,350 குறைப்பு

அறிமுகம் எப்போ

இந்தியாவில் பேட் மினி மேட் டிஸ்ப்ளே எடிஷனின் வெளியீட்டுத் தேதி அல்லது விலையை ஒப்போ இன்னும் அறிவிக்கவில்லை. சீனாவில், இந்த டேப்லெட்டின் 8ஜிபி + 256ஜிபி அடிப்படை மாடலை CNY 3,699 (சுமார் ரூ. 51,000) விலையில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile