HIGHLIGHTS
Google One செயலி பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்து
Google one ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஒன் செயலி பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்து புதிய மைல்கல் எட்டி இருக்கிறது. பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த புதிய செயலியாக கூகுள் ஒன் இணைந்து இருக்கிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஒன் ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பல்வேறு இதர செயலிகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.
Surveyகிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதை கூகுள் ஒன் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதுதவிர கூகுள் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் பேமிலி ஷேரிங் உள்ளிட்ட சேவைகளுக்கான வசதியும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூகுள் ஒன் சேவையில் விபிஎன் (VPN) சேவையும் இணைக்கப்பட்டது.
ஒப்போ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெசேஜஸ் மற்றும் போன் ஆப்ஸ் உள்ளிட்டவைகளை டீபால்ட் செயலியாக வழங்கி வருகின்றன.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile