Flipkart 100 சதவீத பங்குகளை வாங்கிய Walmart.

Flipkart 100 சதவீத பங்குகளை வாங்கிய  Walmart.
HIGHLIGHTS

ப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

வால்மார்ட் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என ப்ளிப்கார்ட் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் ஒன்றை துவங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்வோரை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வால்மார்ட் இந்தியா வியாபாரத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ப்ளிப்கார்ட் குழுமத்திற்கு மாற்றப்படுவர். இந்தியாவின் விலை குறைந்த பிராண்டாக இருக்கும் வால்மார்ட் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என ப்ளிப்கார்ட் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இதில் முதற்கட்டமாக மளிகை மற்றும் அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய மொத்த விற்பனையக திட்டத்திற்கு தலைமை பொறுப்பை ப்ளிப்கார்ட் நிறுவன மூத்த துணை தலைவர் ஆதார்ஷ் மேனன் ஏற்கிறார். இவருடன் வால்மார்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி சமீர் அகர்வால் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பார். 

ப்ளிப்கார்ட் மொத்த விற்பனையகம் தனது பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் புதிய முடிவு அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவைக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo