Fake Traffic Challan நம்பி 3 லட்சத்தை இழந்த அப்பாவி கடை உரிமையார், இதில் தப்பிப்பது எப்படி?

HIGHLIGHTS

Traffic Challan ஸ்கேமில் ரூ,2.76லட்சம் இழந்துள்ளதாக விஷ்ராம்பாக் போலிஷ் ஸ்டேஷனில் புகரளித்துள்ளார்

டிசம்பர் 2025 RTO சாலன் மெசேஜ் வந்ததாகவும் அதில் பைன் தொகை கட்ட வலியுறுத்தி இருந்தது

ஆன்லைன் மோசடிக்காரர் பணத்தை அக்கவுன்டிலிருந்து எடுத்து விட்டதாக புகாரளித்துள்ளர்

புனேவை சார்ந்த 57 வயது கடை உரிமையாளர் போலியான Traffic Challan ஸ்கேமில் ரூ,2.76லட்சம் இழந்துள்ளதாக விஷ்ராம்பாக் போலிஷ் ஸ்டேஷனில் புகரளித்துள்ளார் , அதாவது அதில் டிசம்பர் 2025 RTO சாலன் மெசேஜ் வந்ததாகவும் அதில் பைன் தொகை கட்ட வலியுறுத்தி இருந்தது அந்த லிங்க் க்ளிக் செய்த ஆன்லைன் மோசடிக்காரர் பணத்தை அக்கவுன்டிலிருந்து எடுத்து விட்டதாக புகாரளித்துள்ளர்

“பாதிக்கப்பட்டவர் சதாசிவ் பேட்டையைச் சேர்ந்தவர் மற்றும் திலக் சாலையில் ஒரு கடையை நடத்தி வந்தார். அவர் புனே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். சரிபார்ப்புக்குப் பிறகு, சனிக்கிழமையன்று முறைப்படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது,” என்று கூறினார்.

காவல்துறையின் தகவல்படி, பாதிக்கப்பட்டவரின் போனுக்கு ‘RTO சலான்’ என்ற தலைப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அவர் அந்தச் மெசேஜை திறந்து பார்த்தபோது, ​​அதனுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அந்த லிங்க் ஆன்லைன் வழியாக பணத்தை அனுப்புவதர்க்கனது என நம்பி அந்த நபர் பணத்தை ஆன்லைன் மூலம் கட்ட அந்த லிங்க் க்ளிக் செய்தார் அதன் பிறகு அவரின் போனின் ஸ்க்ரீனில் ஒரு படிவம் (Form) வந்தது அதில் கேட்கப்பட்ட தனிப்பட்ட தகவல் பேங்க் தகவலை உட்பட நிரப்பியதாக அந்த நபர் கூறினார்.

அதாவது அந்த லிங்கில் ரிமோட் அக்சஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டது அதன் பிறகு அவர் Allow’ என்ற ஆப்சனை க்ளிக் செய்த பிறகு தான் மொத்த பணமும் அபேஸ் செய்யப்பட்டதாக கூறினார்.

இதையும் படிங்க: புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

அதனை தொடர்ந்து சென்னை போலிஷ் இது போன்ற போலியான ட்ராபிக் சளானிளிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அதன் X பக்கத்தில் பதிவு செய்துள்ளது அதில் எந்த ஒரு சந்தேகமான லிங்கயும் க்ளிக் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது.

சாலன் மெசேஜில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

  • காவல்துறையின் கூற்றுப்படி, போலி சலான் மோசடியை அடையாளம் காண உதவும் சில அறிகுறிகள் உள்ளன.
  • மெசேஜில் அறியப்படாத லிங்க் இருந்தாலோ, OTP அல்லது CVV கேட்கப்பட்டாலோ, ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் அச்சுறுத்தல் இருந்தாலோ, அல்லது சலான் நம்பர் மற்றும் வாகனத் தகவல்கள் சரியாக வழங்கப்படவில்லை என்றாலோ, கவனமாக இருங்கள்.
  • இது தவிர, பணம் செலுத்துவதற்காக .gov.in தளத்தைத் தவிர வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு ஆப் அல்லது லிங்க் பயன்படுத்தப்பட்டால், அது போலியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

போக்குவரத்து சலானை சரியாகச் சரிபார்ப்பது எப்படி

இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, எப்போதும் அதிகாரப்பூர்வ வெப்சைட் பயன்படுத்துங்கள்.

  • parivahan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, அங்கு வாகன எண் அல்லது டிரைவிங் லைசன் நம்பர் உள்ளிடுவதன் மூலம் மட்டுமே உங்கள் சலானைச் சரிபார்க்க முடியும்.
  • அறியப்படாத லிங்கை க்ளிக் செய்யாதிர்கள் மற்றும் எந்தவொரு வெப்சைட்டிலும் உங்கள் பேங்க் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அரசுத் துறைகள் பொதுவாகத் தனிப்பட்ட மெசேஜ்கள் மூலம் பணம் செலுத்துமாறு கேட்பதில்லை.

ஏமாற்றப்பட்டால் என்ன செய்வது

  • நீங்கள் ஏமாற்றப்பட்டதாகச் சந்தேகித்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
  • முதலில், 1930 (தேசிய சைபர் குற்ற உதவி எண்) என்ற நம்பரை அழைத்து, cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யுங்கள். மேலும், மேற்கொண்டு நடைபெறும் பரிவர்த்தனைகளைத் தடுப்பதற்காக, உங்கள் வங்கி அல்லது அட்டை வழங்கும் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.
  • காவல்துறையின் கூற்றுப்படி, முதல் 60 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை, எனவே தாமதிக்க வேண்டாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :