எலோன் மாஸ்கின் புதிய XChat அறிமுகம் போன் நம்பர் இல்லாமல் வீடியோ, ஆடியோ கால் கூடவே உங்க மெசேஜ் இருக்கும் பாதுகாப்பாக

HIGHLIGHTS

எலன் மாஸ்க் (Elon Musk)ஒரு புதிய மெசேஜிங் தளமான XChat மெசேஜிங் தளத்தை அறிமுகம் செய்துள்ளது

இது ஒரு டிஜிட்டல் எக்கோ சிஸ்டம் போல வேலை செய்யும்.

Tesla யின் CEO இந்த புதிய XChat அம்சம் இந்த பிளாட்பார்மை bitcoin ஸ்டைலில் பாதுகாப்பாக வைக்கும்

எலன் மாஸ்க் (Elon Musk)ஒரு புதிய மெசேஜிங் தளமான XChat மெசேஜிங் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு டிஜிட்டல் எக்கோ சிஸ்டம் போல வேலை செய்யும். இந்த ப்ரைவசி மையமாகக் கொண்ட மெசேஜிங் தளமான XChat, அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ஒருங்கிணைத்துள்ளது, இது WhatsApp மற்றும் பிற பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும். XChat யின் அம்சங்கள் மற்றும் சிறப்புகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

XChat டின் சிறப்பு என்ன

Tesla யின் CEO இந்த புதிய XChat அம்சம் இந்த பிளாட்பார்மை bitcoin ஸ்டைலில் பாதுகாப்பாக வைக்கும் அதாவது இந்த மெசேஜிங் அம்சத்தில் டிச்ப்பியரிங் அம்சம் மற்றும் ஆடியோ,வீடியோ கால்களுக்கு இந்த மெசேஜிங் தளம் பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார் அனைத்து புதிய XChat-ம் என்கரிப்சன், மறைந்துபோகும் மெசேஜ்கள் மற்றும் எந்த வகையான பைலையும் அனுப்பும் திறன் ஆகியவற்றுடன் வெளிவருகிறது. மேலும், ஆடியோ/வீடியோ காலிங் . இது (பிட்காயின் ஸ்டைல் ) என்கரிப்சன் செய்யப்படும் , முழு புதிய கட்டமைப்புடன் ரஸ்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்று X யில் மஸ்க் எழுதினார்.

Xchat யில் இருக்கும் வித்தியாசம் என்ன?

AI அம்சங்கள் மற்றும் X ஒருங்கிணைப்புடன் முழுமையாக என்க்ரிப்டட் மற்றும் பரவலாக்கப்பட்ட மெசேஜிங் தளமாக வரும் XChat, வொயிஸ் மற்றும் வீடியோ செய்தி அனுப்புதல், எண்ட்-டு-எண்ட் குறியாக்கம், கிரிப்டோ வாலட், AI- அடிப்படையிலான ஸ்மார்ட் பதில்கள் மற்றும் ஒத்திசைவு மற்றும் சமூக ஊடகங்களுடன் இயங்கக்கூடிய தன்மை, பணம் செலுத்துதல் மற்றும் ஊடக பகிர்வு போன்ற அம்சங்கள் உட்பட பல அம்சங்களை வழங்குகிறது.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது மஜாவான அம்சம் Logout அம்சத்தால் உங்கள் டேட்டா இருக்கும் பத்திரமாக

XChat, Grok AI சாட்போட்டின் ஒருங்கிணைப்புடன் தன்னாட்சி உதவி அம்சங்களையும் வழங்கும் என்று மஸ்க் கூறினார், இது பயனர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, கூட்டங்களை திட்டமிட மற்றும் அரட்டையை விட்டு வெளியேறாமல் ஆவணங்களை உருவாக்க அனுமதிக்கிறது. சீனாவின் WeChat மற்றும் XChat போன்ற ஒரு சூப்பர் செயலியை உருவாக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார், இந்த இலக்கை நோக்கி ஒரு முக்கியமான படியாக இது இருக்கும். XChat மூலம், மஸ்க் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களிடையே செய்தி அனுப்புதல், சமூக வலைப்பின்னல், டிக்கெட் முன்பதிவு, வங்கி மற்றும் வீடியோ கான்பரன்சிங் போன்ற இணைய அடிப்படையிலான சேவைகளை ஒருங்கிணைக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :