யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார்
'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் தனுஷ் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான "தாய் கிழவி" பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Survey
✅ Thank you for completing the survey!
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் தனுஷ் குரலில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான "தாய் கிழவி" பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமத்து பாணியில் உருவாகி இருக்கும் இப்பாடல் தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் இன்று (24.06.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile