வாகன ஆவணங்களுக்கான புதுப்பிக்க வேலிடிட்டி நீடிப்பு.

வாகன ஆவணங்களுக்கான  புதுப்பிக்க வேலிடிட்டி நீடிப்பு.
HIGHLIGHTS

ஊரடங்கு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வாகன ஆவணங்களின் வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிப்பு.

இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு சான்று போன்றவை அடங்கும்.

ஊரடங்கு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வாகன ஆவணங்களின் வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஆவணங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் அரசு அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo