கொரோனாவை தடுக்க ஐஐடி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்பு.

கொரோனாவை தடுக்க ஐஐடி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்பு.

ஐஐடியை சேர்ந்த குழு ஒன்று எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரத்தை குறைந்த விலையில் உருவாக்கி இருக்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மருத்துவமனை, பேருந்து மற்றும் ரெயில்களின் தரையில் உள்ள கிருமிகளை கொன்று கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும்.  

வணிக ரீதியில் இந்த இயந்திரத்தை ஆயிரம் ரூபாய்க்கு வழங்க முடியும். தற்சமயம் ப்ரோடோடைப் இயந்திரமாக இருக்கும் இதை ஒருவர் இயக்க வேண்டும். புதிய இயந்திரத்திற்கான காப்புரிமையை பெற ஐஐடி கவுகாத்தி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது

எனினும், மனிதர்கள் இன்றி ரோபோட் மூலம் இதை இயங்க வைப்பதற்கான பணியில் இந்த இயந்திரத்தை கண்டறிந்த குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இந்த இயந்திரம் கர்நாடகா அரசின் வேண்டுகோளை தொடர்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் மருத்துவமனைகள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த இயந்திரம் மற்ற அரசாங்கங்களுக்கு வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது.

ஐஐடி குழு உருவாக்கி இருக்கும் யுவிசி எல்இடி சிஸ்டம் கொண்டு 30 விநாடிகளில் கிருமி தொற்று நிறைந்த பகுதியை சுத்தம் செய்ய முடியும். யுவிசி சிஸ்டம் கொண்டு கிருமி தொற்று ஏற்பட்ட பகுதியினை சீராக சுத்தம் செய்ய முடியும் என ஐஐடி குழுவை சேர்ந்த பேராசிரியர் செந்தில் முருகன் சுப்பையா தெரிவித்திருக்கிறார். 

கிருமி தொற்று நிறைந்த பகுதிகளை சுத்தம் செய்ய யுவிசி சிஸ்டம் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இகை கொண்டு 90 சதவீத கிருமிகளை கொன்றுகுவிக்க முடியும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo