பஜாஜ் நிறுவனத்தின் அசத்தலான Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்.

பஜாஜ்  நிறுவனத்தின் அசத்தலான Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  இந்தியாவில் அறிமுகம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அர்பனைட் பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் படிப்படியாக விற்பனைக்கு வர இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

புதிய வாகனம் என்ற போதும் அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டராக இருந்த செட்டாக் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இ ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இதன் மீது பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஹைலைட்கள், வட்ட வடிவLED . ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo