APPLE ஸ்பெஷல் நிகழ்வு செப்டம்பர் 15 நடைபெறுகிறது, சஸ்பன்ஸ் கொடுக்கும் ஆப்பிள்.

APPLE  ஸ்பெஷல் நிகழ்வு  செப்டம்பர் 15 நடைபெறுகிறது, சஸ்பன்ஸ்  கொடுக்கும் ஆப்பிள்.
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் விர்ச்சுவல் நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) நடைபெறும் என அறிவித்துள்ளது

டைம் பிளைஸ் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6, புதிய ஐபேட் மாடல்கள் மற்றும் சில அக்சஸரீக்களை அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் விர்ச்சுவல் நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

டைம் பிளைஸ் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6, புதிய ஐபேட் மாடல்கள் மற்றும் சில அக்சஸரீக்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் OLED டிஸ்ப்ளேக்கள், 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் இரு மாடல்கள் 5.4 இன்ச், 6.1 இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

இதன் ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் LIDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பிராசஸர் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

தற்போதைய நிகழ்வில் ஐஒஎஸ் 14, மேக்ஒஎஸ் 11, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்டவைகளின் வெளியீடு பற்றிய தகவல்களும் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேம்பட்ட எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo