கூகுள் மற்றும் ஆப்பிள் Coronavirus கண்டுபிடிக்க புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கூகுள் மற்றும் ஆப்பிள் Coronavirus கண்டுபிடிக்க புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சேவை

கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பொதுவாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்களை செயல்படுத்தி இருக்கின்றன

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சேவையை உருவாக்கி வந்தன

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக இதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நோட்டிபிகேஷன்களை வழங்கும். இதனை க்ளிக் செய்ததும், கூகுள் வேறொரு செயலியை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். கூகுள் .இந்த சேவை பயனர் அனுமதி இன்றி ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படாது. 
 
கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய நோட்டிபிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பல்வேறு அரசாங்கங்கள் புதிய சேவைகள் மற்றும் செயலிகளை உருவாக்கி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்த குழுவில் இடம்பெறவில்லை.

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பொதுவாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்களை செயல்படுத்தி இருக்கின்றன. எனினும், இந்த அம்சம் வேறொரு செயலியை கொண்டே இயக்க முடியும்.

இதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் கோவிட் 19 எக்ஸ்போஷன் அம்சத்தை ஐஒஎஸ் 13.5 பதிப்பில் கடந்த மாதம் சேர்த்தது. மேலும் ஐபோன்களிலும், இந்த சேவை ரகசியமாக இன்ஸ்டால் செய்யப்படவில்லை. இதனை பயனர்கள் அவர்களாகவே இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo