மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசானும் கலத்தில் இறங்கியுள்ளது.

மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசானும்  கலத்தில்  இறங்கியுள்ளது.
HIGHLIGHTS

Amazon, இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது

அமேசான் நிறுவனமும் தற்சமயம் மதுபானங்களை விரைவில் ஹோம் டெலிவரி செய்ய இருக்கிறது

ஆன்லைன் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. முன்னதாக ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்ய துவங்கியது. 

இருநிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் தற்சமயம் மதுபானங்களை விரைவில் ஹோம் டெலிவரி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணிகளை அமேசான் துவங்க உள்ளது. 

மதுபானங்களை விநியோகம் செய்வதற்கான அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது. அதிக மக்கள் தொகையில் நாட்டின் நான்காவது பெரிய மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்தில் சுமார் 9 கோடி பேர் வசிக்கின்றனர். 

கடந்த சில ஆண்டுகளில் அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo