Aadhaar card Update: இலவச அப்டேட் இன்னும் 2 நாட்களில் முடிகிறது

Aadhaar card Update: இலவச அப்டேட் இன்னும் 2 நாட்களில் முடிகிறது
HIGHLIGHTS

10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்யுமாறு UIDAI கேட்கிறது

UIDAI தற்போது ஆதாரை இலவசமாக அப்தேட்டுக்கு வாய்ப்பை வழங்குகிறது

ஆதார் கார்டை இலவசமாகப் அப்டேட் கடைசி தேதி 14 டிசம்பர் 2023 ஆகும்

அனைவரும் Aadhaar card பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தொடர்பான விதிகள் பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஆதார் தொடர்பான இந்த தகவலை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும்மாறு பயனர்களை UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்யுமாறு UIDAI கேட்கிறது. இந்த இலவச அப்டேட் முடிவடைய இன்னும் ஒரு நாட்களே இருக்கிறது அதை எப்போது, ​​எப்படி அப்டேட் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: Redmi 13C 4G ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது விலை மற்றும் ஆபர் தகவல் பாருங்க

Aadhaar இலவச அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும்.

இந்த வேலையை நீங்கள் இலவசமாக செய்து கொள்ளலாம். UIDAI தற்போது ஆதாரை இலவசமாக அப்தேட்டுக்கு வாய்ப்பை வழங்குகிறது. ஆதார் கார்டை இலவசமாகப் அப்டேட் கடைசி தேதி 14 டிசம்பர் 2023 ஆகும். அதாவது, இந்த வேலையை இலவசமாகச் செய்ய உங்களுக்கு இப்போது மூன்று நாட்கள் உள்ளன. உங்கள் ஆதார் கார்டை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்துகொள்ளலாம் . ஆதார் கார்டை அப்டேட் அடையாள கார்ட் மற்றும் முகவரிச் சான்று ஆகிய தலா ஒரு ஆவணம் தேவைப்படும். வாக்காளர் அடையாள கார்டை அடையாள கார்டாக பயன்படுத்தலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்ட் அப்டேட் எப்படி செய்வது?

  • முதலில் நீங்கள் UIDAI யின் அதிகாரப்பூர்வ வேப்சைட்டிர்க்கு செல்ல வேண்டும்.
  • இதற்குப் பிறகு ஆதார் அப்டேட் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் முகவரியைப் அப்டேட் செய்ய விரும்பினால், அப்டேட் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிட்டு OTP ஐ உள்ளிட வேண்டும்.
  • இதன் பிறகு Documents Update ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது ஆதார் தொடர்பான விவரங்கள் உங்கள் முன் தெரியும்.
  • விவரங்களைச் சரிபார்த்து, முகவரியைப் அப்டேட் செய்ய தேவையான ஆவணங்களைப் அப்லோட் செய்யவும்
  • ஆதார் அப்டேட் செயல்முறையை எக்டிவேட் செய்யவும் .
  • இப்போது நீங்கள் அப்டேட் ரெகுவஸ்ட் நம்பர் (URN) நம்பரை பெறுவீர்கள். இதன் மூலம் நீங்கள் அதை கண்காணிக்க முடியும்.

ஆஃப்லைனில் ஆதார் கார்டை எப்படி அப்டேட் செய்வது?

இது தவிர, இந்த வேலையை ஆஃப்லைனிலும் முடிக்கலாம். இதற்கு நீங்கள் CSC அல்லது ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். கடைசி தேதி கடந்த பிறகு, புதுப்பிப்பதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo