ஆதார் கார்டில் இலவச AC பிரதமர் மோடி தருவதாக வைரலாக பரவும் மெசேஜ் எந்த அளவுக்கு உண்மை?

ஆதார் கார்டில் இலவச AC பிரதமர் மோடி தருவதாக வைரலாக பரவும் மெசேஜ் எந்த அளவுக்கு உண்மை?

சோசியல் மீடியா ஒரு வீடியோ ஒன்று அதி வேகமாக வைரல் ஆகி வருகிறது, அதில் பிரதமர் மோடி ஆதார் கார்ட் பயனர்களுக்கு AC இலவசமாக வழங்குகுவதாக அறிவிப்பு கொடுக்கப்பட்ட வீடியோ வைரளாகி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை பற்றி PIB Fact Check மூலம் அந்த வீடியோ ஒரு போலியானதாக கூறப்பட்டுள்ளது மேலும் இதன் முழு விவரம் என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

PIB Fact Check யில் கூறியது என்ன?

அரசின் அதிகாரபூர்வமான PIB Fact Check மூலம் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த வீடியோ முழுக்க முழுக்க ஒரு போலியான வீதியாகும் பிரதம நரேந்திர மோடி ஆதார் கார்ட் பயனர்களுக்கு எந்த வித இலவச AC திட்டத்தையும் அறிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது, மேலும் இது போன்ற போலி வீடியோவை மக்களை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஒரு AI மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

பேக்ட்-செக் மூலம் வைரலான அந்தக் வீடியோ ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அடிப்படையிலான போலி வீடியோக்கள் மற்றும் ஒலித்துண்டுகளின் (Sound cloud Tracks) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டீப்ஃபேக் தொழில்நுட்பமானது, பொதுமக்கள் இதுபோன்ற கண்டேன்ட்களை அடையாளம் காணலாம் காண்பதை மேலும் கடினமாக்கியுள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

போலியான வதந்திகள் ஏன் வேகமாக பரவுகிறது?

கவர்ச்சிகரமான சலுகைகள், இலவசத் திட்டங்கள் மற்றும் அரசாங்க நலன்கள் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாக்களில் வேகமாகப் பரவுகின்றன. மக்கள் பெரும்பாலும் இவற்றைச் சரிபார்க்காமல் பகிர்கின்றனர். இதனால், தவறான தகவல்கள் சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. இலவச எரிவாயு சிலிண்டர்கள், பணமதிப்பிழப்பு, வங்கி ஒழுங்குமுறைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் குறித்த பொய்யான கூற்றுகள் இதற்கு முன்பும் வைரலாகப் பரவியுள்ளன.

அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை எங்கே பெறுவது?

எந்தவொரு அரசாங்கத் திட்டம் குறித்த தகவல்களையும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் அரசாங்க மூலங்களிலிருந்து மட்டுமே பெற வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். பரவலாகப் பகிரப்படும் ஒரு பதிவில் குறிப்பிடத்தக்க பலன்கள் அல்லது இலவசங்கள் இருப்பதாகக் கூறப்பட்டால், அதனை சம்பந்தப்பட்ட அமைச்சகம், அரசாங்க இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மை சரிபார்ப்புத் தளம் ஆகியவற்றைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.

போலிச் செய்திகளைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்?

தவறான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார மற்றும் சமூகத் தீங்குகளையும் உண்டாக்கும். எனவே, எந்தவொரு செய்தியையும் பகிரும் முன் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம். வைரலாகும் உள்ளடக்கங்களால் ஈர்க்கப்பட வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile