Nintendo அறிமுகப்படுத்தியது பெரிய டிஸ்ப்ளேவுடன் புதிய ஸ்விட்ச் OLED மாடல்

Nintendo அறிமுகப்படுத்தியது பெரிய டிஸ்ப்ளேவுடன் புதிய ஸ்விட்ச் OLED  மாடல்
HIGHLIGHTS

நின்டென்டோ ஸ்விட்ச் (OLED மாடல்) புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

புதிய நின்டென்டோ ஸ்விட்ச் OLED மாடல் விலை 349.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,100 ஆகும்

புதிய நின்டென்டோ ஸ்விட்ச் மாடல் தற்போது கிடைக்கும்

நின்டென்டோ ஸ்விட்ச் (OLED மாடல்) புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இது இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிகிறது. 
 
பெரிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், புதிய கன்சோல் அளவில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நின்டென்டோ ஸ்விட்ச் OLED மாடல் விலை 349.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,100 ஆகும். முன்னதாக 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட நின்டென்டோ ஸ்விட்ச் விலை 299.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  

புதிய நின்டென்டோ ஸ்விட்ச் மாடல் தற்போது கிடைக்கும் அனைத்து நின்டென்டோ ஸ்விட்ச் கேம்கள் மற்றும் ஜாய்-கான் கண்ட்ரோலர்களை சப்போர்ட் செய்யும். புதிய OLED மாடலில் சற்றே பெரிய டிஸ்ப்ளே, முந்தைய மாடலை விட இருமடங்கு இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo