jana nayagan
Jananayagan Postpond: நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 தேதி ரிலீஸ் ஆகாது என மிக பெரிய ஷாக் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்க உள்ளது. இதன் காரணமாக இந்த படத்தின் தேதியிய தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக KVM ப்ரொடெக்ஷன் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த பதிவில் இந்த மிகவும் ஆரமாக இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ஷாக் தரலாம் எனவும் இதில் கோரப்பட்டுள்ளது இதை தவிர அந்த பதிவில் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என ட்விட்டர் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்ததனர் ஆனால் இது மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அளிக்கலாம்
KVN நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது ஆனால் இப்பொழுது சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படம் வேறு ஒரு புதிய தேதியில் வரும் என கூறப்பட்டுள்ளது . இந்த படத்தில் விஜய் உடன், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைக்க படத்தின் 4 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.