உயிரை காப்பாற்றிய ஹெட்போன் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பித்த .இளைஞர்
அமெரிக்கா இளைஞர் ஒருவர், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிர் பிழைத்துள்ளார்
ஜன்னல் வழியாக வந்த தோட்டாவை ஹெட்போன் தடுத்து எனது உயிரை காப்பாற்றியது
அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அதிஷ்டம் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் கதவை தட்டும். அதுபோல தான் அமெரிக்கா இளைஞர் ஒருவர், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிர் பிழைத்துள்ளார். இந்த நல்வாய்ப்பை அவருக்கு உரித்தாக்கியது ஒரு ஹெட்போன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.
Surveyஇந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்ததாக Enough_Dance_956 என்ற பெயருடைய தனது ரெட்டிட் (Reddit) பக்கத்தில் இளைஞர் பதிவிட்டுள்ளார். படுக்கை அறை ஜன்னல் வழியாக வந்த தோட்டாவை ஹெட்போன் தடுத்து எனது உயிரை காப்பாற்றியது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எனது படுக்கையறையில் படுத்திருந்தபோது ஜன்னல் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று என் தலையை நோக்கி பறந்து வந்தது. தலையில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் தோட்டா ஹெட்போனில் பட்டு தெரித்தது.
உயிரை காத்த ஹெட்போன்
அந்த பதிவில், "இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். Razer நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு மனதார நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். காலை 10:30 மணியளவில், படுக்கையறை ஜன்னல் வழியாக வந்த தோட்டா, என் தலையில் வைத்திருந்த ரேசர் ஹெட்போனைத் தாக்கியது.
நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்போன் என்பதால் பிழைத்துக்கொண்டேன். ஹெட்போன் என் உயிரை காப்பாற்றியது. இல்லையென்றால் 18 வயதில் நான் இறந்திருப்பேன். இந்த ஹெட்போனை தயாரித்த ரேசர் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.
Razer Kraken ஹெட்போன் சிறப்பம்சம்
நல்வாய்ப்பாக என் தலையில், Razer Kraken ஹெட்போன் இருந்தது. தோட்டா என் ஜன்னல் வழியாக வந்து ஹெட்செட்டில் பட்டு அதை தூக்கி வீசியது. ஹெட்செட் தெறித்து சுவற்றில் இடித்து, பின்னர் என் படுக்கையில் வந்து விழுந்தது. இதனை கண்ட நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காவல் துறையினர் வந்து தோட்டாவை கைபற்றிவதற்காகக் காத்திருந்தோம்," என்று இளைஞர் பதிவிட்டிருந்தார்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
