ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ரூ. 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் அறிமுக சலுகை பெயரில் அமேசானில் ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய ட்ரூக் ஃபிட் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. மேலும் இதன் இயர்போன்கள் 13 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ட்ரூக் ஃபிட் ப்ரோ மாடலில் ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், 24 மணி நேர பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மூலம் இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
உண்மையில் இதன் விலை ரூ. 4999 என குறிப்பிடப்பட்டு ரூ. 999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக ட்ரூக் ஃபிட் ப்ரோ இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile