புதிய Realme Buds Air8 Pro அறிமுகம் 50 மணி நேரம் பேட்டரி பேக்கப் உடன் இசை மழையில் நலயலாம்
Realme அதன் புதிய Realme Buds Air8 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது
இது, பட்ஸ் ஏர்7 ப்ரோ என்ற பழைய மாடலுக்குப் பிறகு வந்துள்ளது
இந்த இயர்பட்ஸ்களில், சக்திவாய்ந்த ஆக்டிவ் நோய்ஸ் கேன்சலேஷனை உடன் வருகிறது
Realme அதன் புதிய Realme Buds Air8 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது, பட்ஸ் ஏர்7 ப்ரோ என்ற பழைய மாடலுக்குப் பிறகு வந்துள்ள, இந்த பிராண்டின் சமீபத்திய இயர்பட்ஸ் ஆகும். இந்த இயர்பட்ஸ்களில், சக்திவாய்ந்த ஆக்டிவ் நோய்ஸ் கேன்சலேஷனை சப்போர்ட் செய்யும் டூயல் டிரைவர்களை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இவை ஹை-ரெஸ் ஆடியோவையும் சப்போர்ட் செய்கிறது . இந்த இயர்பட்ஸ்களில் ANCக்காக ஆறு மைக்ரோஃபோன்கள் உள்ளன. இவை ப்ளூடூத் 6.1-ஐ சப்போர்ட் செய்கிறது.
SurveyRealme Buds Air8 Pro விலை தகவல்.
விலையைப் பொறுத்தவரை, Realme Buds Air8 Pro இந்தியாவில் roo,6,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ், நிறுவனத்தின் ரீடைலர் விற்பனைக் கடைகளிலும், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இயர்பட்ஸ்களின் விற்பனை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும்.
Realme Buds Air8 Pro சிறப்பம்சம்.
Realme Buds Air8 Pro , 6mm மைக்ரோபிளேன் ட்வீட்டர் மற்றும் 11mm பேஸ் டிரைவர் உட்பட இரட்டை டிரைவர்கள் உள்ளன. இவை டூயல் DAC ஆடியோ பிராசஸிங் சிப்புடன் வருகின்றன. டைனமிக் பேஸ் இருப்பதாக நிறுவனம் உறுதியளிக்கிறது. இவை 5000Hz வரையிலான அல்ட்ராவைடு வைப்ரேஷன் நோய்ஸ் குறைப்பை சப்போர்ட் செய்கிறது. மேலும், ஆறு மைக்குகளால் இயக்கப்படும் AI நோய்ஸ் கேன்சிளிஷன் வசதியையும் இவை கொண்டுள்ளன. இவை 55dB வரையிலான ஆக்டிவ் நோய்ஸ் கேன்சிலேஷன் வசதியை ஆதரிக்கின்றன.
பட்ஸ் ஏர்8 ப்ரோவில் புளூடூத் 6.1 இணைப்பு வசதி உள்ளது. இவற்றால் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுடன் இணைக்க முடியும். ஆடியோ கோடெக்குகளில் LHDC 5.0, AAC, மற்றும் SBC ஆகியவை அடங்கும், மேலும் இவை 45ms என்ற மிகக் குறைந்த தாமதத்தை ஆதரிக்கின்றன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக நிறுவனம் இவற்றுக்கு IP55 தரமதிப்பீடு வழங்கியுள்ளது. இந்த இயர்பட்ஸ் 32 வெளிநாட்டு மொழிகளுக்கான ட்ரேன்ச்லேஷன் சப்போர்ட் செய்யப்படுகின்றன.
பேட்டரியைப் பொறுத்தவரை, ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ ஒரே சார்ஜில் 50 மணிநேரம் வரை நீடிக்கும். இயர்பட்ஸ்களில் 62mAh பேட்டரியும், சார்ஜிங் கேஸில் 590mAh பேட்டரியும் உள்ளன. இவற்றில் குயிக் சார்ஜ் வசதியும் உள்ளது. 10 நிமிட சார்ஜில் 11 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். கேஸ் உட்பட, 120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile