Noise டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம்.

Noise டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம்.

நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஹெட்போன் ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12 மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180 மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் சிறப்பம்சங்கள்:

– சிறப்பான ஆடியோ வழங்க 10mm N50 நியோடிமியம் காந்த சக்தி டிரைவர்கள்
– குவால்கம் QCC3003 சிப்செட்
– ப்ளூடூத் 5.0
– 20Hz-20KHz ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ்
– டூயல் பேரிங் வசதி – ஒரே நேரத்தில் ஹெட்போனை லேப்டாப் மற்றும் மொபைலுடன் இணைக்க முடியும்
– குவால்காம் CVC 8.0 காற்றின் சத்தத்தை குறைக்கும்
– 2718 ரக சிலிகான் கொண்ட மைக்ரோபோன்
– வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX5)
– சிரி, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
– 140 Mah . பேட்டரி

சிலிகான் ஜெல் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதனை பயன்படுத்துவதால், சரும பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. மேலும் இதன் நேர்த்தியான வடிவமைப்பு வாடிக்கையாளர்களின் கழுத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கிறது. 

நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஸ்பேஸ் கிரே, டியல் கிரீன் மற்றும் பிரான்ஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் கோநாய்ஸ் போன்ற வலைத்தளங்களில் துவங்குகிறது. இதன் விலை ரூ. 2,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் பிரான்ஸ் கிரே வேரியண்ட் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo