HONOR யின் புதிய இன்-இயர் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

HONOR யின்  புதிய இன்-இயர் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

ஹானர் ஏ.எம்.115 இயர்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. AM115 இயர்போனில் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது

ஹூவாயின் HONOR பிராண்டு இந்தியாவில் புதிய இன்-இயர் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் ஹானர் ஏ.எம்.115 என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர்AM115 இயர்போனின் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது.

ஹானர் ஏ.எம்.115 இயர்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. AM115 இயர்போனில் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது எனினும், இது சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. 

இத்துடன் அழைப்புகளை ஏற்பது, கண்ட்ரோல் பிளேபேக் போன்ற அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இயர்போன் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே விற்பனைக்கு வழங்கப்படுவதாக ஹானர் தெரிவித்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo