Amazon Alexa அமிதாப் பச்சன் குரலில் குரலில் பேசி அசத்தும் அம்சம் விரைவில் வருகிறது.

Amazon Alexa  அமிதாப் பச்சன் குரலில் குரலில் பேசி அசத்தும்  அம்சம் விரைவில் வருகிறது.
HIGHLIGHTS

அமேசான் இந்தியா, அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.

பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவில் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் இந்தியா, அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.

பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இது அமேசான் எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக், அலெக்சா செயலி மற்றும் இதர மூன்றாம் தரப்பு சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி அலெக்சா சேவையில் அமிதாப் பச்சன் குரல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென அமிதாப் பச்சன் அமேசான் நிறுவனத்துடன் பணியாற்றுகிறார். அமிதாப் பச்சன் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் வழங்கப்பட இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo