அரட்டை யூசர்நேம் அம்சத்தை கை விட்டது, WhatsApp-க்கு அரசின் அதிரடி உத்தரவு தான் காரணமா, ஸ்ரீதர் வேம்பு கூறுவது என்ன

HIGHLIGHTS

அரட்டை தனது யூசர்நேம் அடிப்படையிலான அக்கவுன்ட் அம்சத்தை முடக்கும்

ஸ்ரீதர் வேம்பு ஒழுங்குமுறை கருத்தில் கொண்டு முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரட்டை' (Arattai) என்பது ஜோஹோவின் (Zoho) மெசேஜ் அனுப்பும் தளமாகும்.

WhatsApp திட்டமிடப்பட்ட Username அறிமுகத்தை இந்திய அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து, அரட்டை தனது யூசர்நேம் அடிப்படையிலான அக்கவுன்ட் அம்சத்தை முடக்கும் என்று ஸோஹோ(Zoho) இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, யூசர்நேம் அடிப்படையிலான அடையாளங்கள் குறித்த மத்திய அரசின் சமீபத்திய ஒழுங்குமுறை நிலைப்பாட்டிற்குப் பகிரங்கமாகப் பதிலளிக்கும் முதல் மெசேஜ் அனுப்பும் தளங்களில் ஒன்றாக அரட்டாயைத் ஆக்குகிறது.

அரட்டை(Arattai) யூசர்நேம் அடிபடயிணன் அம்சத்தை ட்ரோப் செய்துள்ளது.

ஸ்ரீதர் வேம்பு X தளத்தின் போஸ்ட் படி அதில் அவர் user name அடிபடையிலான அக்கவுன்ன்ட் அம்சத்தை ஒழுங்குமுறை கருத்தில் கொண்டு முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அரட்டை’ (Arattai) என்பது ஜோஹோவின் (Zoho) மெசேஜ் அனுப்பும் தளமாகும். இந்நிறுவனம் இம்முடிவை உறுதிப்படுத்தியிருந்தாலும், இச்சேவையை நீக்குவதற்கான காலக்கெடு எதையும் அறிவிக்கவில்லை.

வேம்பு இந்த அம்சத்தை முடக்க காரணம் என்ன?

இந்தியாவில் வாட்ஸ்அப்பின் யூசர்நேம் அம்சத்தை அறிமுகப்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு எலெக்ட்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே வேம்புவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதிகாரிகளுடனான ஆலோசனைகள் முடிவடைந்து, இணையப் பாதுகாப்பு மற்றும் இணைய மோசடி தொடர்பான கவலைகள் தீர்க்கப்படும் வரை இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கம் WhatsApp யூசர்நேம் அம்சத்தை நிறுத்தியது ஏன்?

WhatsApp சமிபத்தில் அதன் தனித்துவமான அம்சமான usernames அம்சத்தை கொண்டு வருவதாக அறிவித்தது அதாவது இதில் மக்கள் தனது யூசர் நேம் செட் செய்யலாம், இந்த அம்சமானது முக்கியமாக பிஸ்னஸ் அல்லது தெரியாத ஒரு நபரிடம் போன் நம்பர் ஷேர் செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்காக கொண்டு வரப்பட்டது மேலும் இந்த அம்சத்தை மக்களின் ப்ரைவசி மனதில் கொண்டு Meta இந்த அம்சத்தை கொண்டு வந்தது குறிப்பாக புதிய காண்டேக்ட் மற்றும் க்ரூப் சேட் பயனர்களுக்கு இது கொண்டு வந்தது .

இருப்பினும், மோசடி செய்பவர்கள் வங்கிகள், அரசு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுப் பிரமுகர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய பயனர்பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்தது. இத்தகைய தவறான பயன்பாடு ஃபிஷிங் தாக்குதல்கள், நிதி மோசடி மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகளை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ், சிம் அடிப்படையிலான சரிபார்ப்பு ஒரு முக்கியப் பாதுகாப்பாகத் தொடரும் நிலையில், தடமாரப்படளாம் என்று கருதப்படுகிறது.

அரசு ஒரு சில டெக்னிக்கல் தகவல் Meta

அறிக்கைகளின்படி, அந்த அம்சத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மோசடி தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான தொழில்நுட்ப விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு MeitY, Meta நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்பம் இடைத்தரகர் (Intermediary) கைட்லைன் மற்றும் டிஜிட்டல் சோசியல் நெறிமுறைகள்) விதிகள், 2021 ஆகியவற்றின் கீழ் உள்ள அதன் கடமைகளையும் அரசாங்கம் அந்நிறுவனத்திற்கு நினைவூட்டியது.

அந்த அறிக்கையில் இடையில் இண்டர்மீடியட் சட்ட விரைதோ சிக்கல் பல நேரிடும் என என கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க WhatsApp யூசர்நேம் அம்சத்தில் அரசின் அதிரடி கண்காணிப்பு, ஆன்லைன் பிராட் அதிகரிக்கலாம்

WhatsApp யின் பதில் என்ன ?

WhatsApp கூறியது என்னவென்றால், தற்பொழுது இந்த யூசர்நேம் அம்சமானது ரிசர்வேஷன் அதாவது முன்பதிவு செய்யப்படுகிறது மற்றும் இந்த மாசத்தின் மூலம் இப்பொழுது யாரும் மெசேஜ் அனுப்புவதற்காக அனுமதிக்கவில்லை, மேலும் யூசர்நேம் அக்கவுன்ட் உருவாகுவதற்கு வேரிபைட் செய்யப்பட்ட காண்டேக்ட் நம்பர் காடயமாகப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.

அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நபர்களுக்கான ஒதுக்கப்பட்ட பயனர்பெயர்கள், ஒரே மாதிரியான பயனர்பெயர்களுக்கு எதிரான பாதுகாப்பு, விருப்பத்தேர்வுக்கான பயனர்பெயர் PIN நம்பர்கள் , முதல் முறை அனுப்பப்படும் மேசெஜ்களுக்கான சூழல் சார்ந்த தகவல்கள் மற்றும் கோரப்படாத தொடர்புகளுக்கான வரம்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் மெட்டா எடுத்துரைத்தது.

வாட்ஸ்அப் இந்த அம்சத்தை ப்ரைவசியை சார்ந்தது என்று நியாயப்படுத்தினாலும், முன்மொழியப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தேவையின் அடிபடையில், வேம்புவின் இந்த கருத்து மற்ற மெசேஜிங் தளங்களுக்கு அதே அம்சங்களை தூண்டி வருவதாக் கூறியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :