WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி Unread மெசேஜ் தொல்லை இருக்காது

Updated on 22-May-2024
HIGHLIGHTS

WhatsApp தற்பொழுது ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது

ஆப் யில் அன்ரீட் மெசேஜை மேனேஜ் செய்வதற்க்கு கூடுதல் கண்ட்ரோல் வழங்குகிறது

WABetaInfo யின் ஒரு ரிப்போர்ட் படி இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஒரு புதிய அம்சத்தை டெஸ்டிங் செய்து வருகிறது

WhatsApp தற்பொழுது ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்கிறது, இது பயனர்களை அதன் Android ஆப் யில் அன்ரீட் மெசேஜை மேனேஜ் செய்வதற்க்கு கூடுதல் கண்ட்ரோல் வழங்குகிறது. தற்போது இந்த வசதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. எனவே Google Play பீட்டா திட்டத்தின் மூலம் பதிவு செய்த பீட்டா டெஸ்ட்டர்களுக்கு இன்னும் அதை அணுக முடியாமல் போகலாம். ஆப் யில் அதிக அளவு ஷார்ட் மெசேஜ் பெறுபவர்களுக்கும், சேட்களை மேனேஜ் செய்ய சிரமம் உள்ளவர்களுக்கும் அறிக்கையிடப்பட்ட அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

WhatsApp யின் புதிய அம்சம்

WhatsApp அப்டேட் ட்ரேக்கர் WABetaInfo யின் ஒரு ரிப்போர்ட் படி இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஒரு புதிய அம்சத்தை டெஸ்டிங் செய்து வருகிறது, பயனர்கள் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் படிக்காத மேசெஜ்களின் எண்ணிக்கையை ரீசெட் செய்ய ஆண்ட்ராய்டு 2.24.11.13க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இந்த அம்சம் காணப்பட்டாலும், இது தற்போது செயலில் இல்லை மேலும் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு புதிய பீட்டா பில்ட் இன்ஸ்டால் செய்தால் அதைப் பெறாமல் போகலாம். அறிக்கையின்படி, இந்த அம்சம் நோட்டிபிகேசன் அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்படும்

#WhatsApp unread message count Tamil

ஷேர் செய்த ஸ்க்ரீன்ஷாட் அடிப்படையில், நோட்டிபிகேசனில் புதிய செட்டிங்க்ஸ் ஒப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, ​​லைட் விருப்பத்திற்கு கீழே, பயனர்கள் இரண்டு விருப்பங்களைக் காணலாம், ஒன்று நோட்டிபிகேசன் priview இயக்க அனுமதிக்கிறது, மற்றொன்று Response நோட்டிபிகேசன் காட்டுகிறது. ஸ்கிரீன்ஷாட்டில், இந்த இரண்டு விருப்பங்களுக்கிடையில் ஒரு புதிய விருப்பம் தெரியும், அதன் தலைப்பு ஆப்ஸ் திறந்திருக்கும் போது படிக்காதது தெளிவாக உள்ளது. அதன் விளக்கம், “நீங்கள் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் படிக்காத மேசெஜ்களின் எண்ணிக்கை அழிக்கப்படும்” என்று கூறுகிறது.

அதிக அளவு ஷோர்ட் மெசேஜை பெறுபவர்களுக்கு இது ஒரு சிறந்த அம்சமாக இருக்கும். ஒருவர் தினமும் 15-20 புதிய மெசேஜ்களை பெறுவது போலவும், சில சமயங்களில் அனைத்தையும் படிப்பது கடினமாகவும் இருக்கும். அவற்றுள் சிலவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், யாரும் அவற்றைத் திறக்கவில்லை என்றால், கீழே உள்ள சேட் ஐகான் படிக்காமல் விடப்பட்ட சேட்களின் எண்ணிக்கையைக் காண்பிக்கும். அதிக எண்ணிக்கையிலான மேசெஜ்களுடன் பல க்ரூப்களுடன் இணைக்கப்பட்டவர்களுக்கும் இதே பிரச்சனை ஏற்படலாம்.

இதையும் படிங்க:Vodafone Idea யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்

இருப்பினும் பல அன்ரீட் மெசேஜ் உடன் ஆப் பார்ப்பது என்பது நமக்கு பிரச்சனையாக இருக்கும், ஆனால் WhatsApp இந்த அம்சத்தை பற்றி பேசினால் இது பலரின் அனுபவத்தை மோசமாகவும் மாறலாம், பயனர்கள் செட்டிங்கள் விருப்பத்தை மாற்றும்போது, ​​ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆப்பை திறக்கும் போது படிக்காத எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கப்படும், ஒவ்வொரு சேட்டையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய தேவையை நீக்குகிறது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :