WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி அக்கவுண்ட் இல்லாதவரையும் இணைக்கலாம்

WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி அக்கவுண்ட் இல்லாதவரையும் இணைக்கலாம்

WhatsApp யில் விரைவில் புதிய அம்சம் கொண்டு வர இருக்கிறது, இந்த புதிய அம்சத்தின் பெயர் guest calling அம்சம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் WhatsApp யில் அக்கவுண்டே இல்லாதவர்களுக்கும் வாட்ஸ்அப் கால் செய்யலாம். இது, ஆப்பை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அக்கவுண்டை உருவாக்கவோ தேவையில்லாமல், நேரடியாக வெப் பிரவுஸர் (web browser) மூலமாகவே கான்வேர்செஷன் மேற்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. தற்போது, ​​வாட்ஸ்அப் ஆப் மற்றும் அக்கவுண்ட் இல்லாத பயனர்களால் வாட்ஸ்அப் காலில் இணைய முடிவதில்லை. இந்த ‘விருந்தினர் கால்’ (guest call) வசதி அந்தச் சிக்கலைப் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp guest call அம்சம் என்ன ?

இந்த வாட்ஸ்அப் அம்சத்தை WABetaInfo கண்டறிந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாத பயனர்கள் கூட ஒரு பாதுகாப்பான கனெக்ஷன் வழியாக வாட்ஸ்அப் கால்களில் இணைய முடியும். இந்த அம்சம், தற்போதுள்ள வாட்ஸ்அப் Guest சேட் வசதியைப் போலவே உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம், அக்கவுண்ட் இல்லாத பயனர்கள் வாட்ஸ்அப் வழியாக கால்களை மேற்கொள்ள அனுமதிக்கும்.

இருப்பினும், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ஹோஸ்ட் ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் கொண்டிருக்க வேண்டும். ஹோஸ்ட்கள் தங்கள் அக்கவுன்டிலிருந்து ஒரு கெஸ்ட் கால் லிங்கை உருவாக்கி, அதை எந்தவொரு பயனருக்கும் அனுப்பலாம். இந்த கால் லிங்கை கொண்டவர்கள், வாட்ஸ்அப் அக்கவுண்ட் உருவாக்காமலோ அல்லது ஆப்பை இன்ஸ்டால் செய்யாமல் கூட காலில் இணைய முடியும். அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பில் உள்ள இந்த Guest Call அம்சம், வழக்கமான தளத்தைப் போலவே முழுமையாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும், அதாவது இது பாதுகாப்பாக இருக்கும். காலில் நபர்களைச் சேர்க்கவும் நீக்கவும் ஹோஸ்ட்டுக்கு உரிமை உண்டு.

இதையும் படிங்க 7200mAh பேட்டரியுடன் சத்தமில்லாமல் புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பாருங்க

வாட்ஸ்அப் Guest calls அம்சத்தில் end-to-end encrypted இருக்கிறதா?

விருந்தினர் கால்களுக்கு (guest calls), சாதாரண கால்களுக்கு பயன்படுத்தப்படும் அதே பாதுகாப்பு முறையையே வாட்ஸ்அப் பின்பற்றும். ஒரு கெஸ்ட்தங்கள் பிரவுசரில் (browser) கால்களுக்கான லிங்கை திறக்கும்போது, ​​வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) அந்த (session) ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியை உருவாக்கும். மேலும் அது காலை பாதுகாக்கும் என்கிரிப்ஷன் கீ (encryption key) உருவாக்க வாட்ஸ்அப் இதைப் பயன்படுத்துகிறது. இதன் பொருள், காலின் கன்டென்ட் இயல்பாகவே என்கிரிப்ட் செய்யப்படுகிறது மற்றும் வாட்ஸ்அப்பால் அந்த கான்வேர்செஷன் அணுக முடியாது என்பதாகும். இதன் விளைவாக, பிரவுசர் செசன் போதுமானதாக இருப்பதால், அந்தச் கீஉருவாக்க வாட்ஸ்அப்பிற்குப் யூசர் அக்கவுண்ட்எதுவும் தேவைப்படுவதில்லை.

இந்த guest call அம்சம் தற்பொழுது டேவாலப்பிங்கில் இருக்கிறது , இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்டவுடன் இது அனைவருக்கும் லைவ் ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile