வாட்ஸ்ஆப் யில் விரைவில் கிடைக்கும், குரூப் வீடியோ காலிங் அம்சம்

வாட்ஸ்ஆப் யில் விரைவில் கிடைக்கும், குரூப் வீடியோ காலிங் அம்சம்
HIGHLIGHTS

இந்த அம்சம் வாட்ஸ்ஆப் யின் பீட்டா வெர்சன் 2.17.437 மற்றும் 2.17.443 அப்டேட்டில் காணப்படுகிறது

வாட்ஸ்ஆப் உலக முழுதும் அனைத்து மக்களும் பயன் படுத்தும் ஆப்களின் ஒன்றாகும், சுமார் இதை அனைத்து வயதினரும்  பயன் படுத்தி வருகிறார்கள், இப்பொழுது இது வரை பயனர்கள் வாட்ஸ்ஆப் யில் டெக்ஸ்ட்,போட்டோ வீடியோ போன்ற பல விசயங்களை அனுப்பி வந்தார்கள், இதனுடன் வொயிஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் செய்ய முடிந்தது, ஆனால் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு விரைவில் இதில் குரூப் வீடியோ காலிங் அம்சமும் கொண்டு வர உள்ளது, இதனுடன் நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் குரூப் வீடியோ காலிங் பயன்படுத்தலாம் 

 

WABetaInfo அதன் ஒரு ரிப்போர்டில் தகவல் வழங்கியுள்ளது, நிறுவனம் குரூப் வீடியோ காலிங் அம்சம் பற்றி இப்பொழுது டெஸ்டிங் செய்து வருகிறது, இந்த அம்சம் முதல் முதலில் ஆண்ட்ரோய்ட் பிளாட்போர்மில் இருக்கிறது மற்றும் அதன் பிறகு iOS தளங்களில் பொருத்த படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ரிபோர்டின் படி மொத்தமாக நான்கு பெரும் ஒன்றாக சேர்ந்து குரூப் வீடியோ காலிங்க் செய்யலாம், இந்த அம்சம் வாட்ஸ்ஆப் யின் பீட்டா வெர்சன்  2.17.437 மற்றும் 2.17.443 அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

குரூப் வீடியோ காலிங் தவிர, வாட்ஸ்ஆப்  விரைவில் ஸ்டிக்கர்ஸ் பயனர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது, அதாவது பேஸ்புக்கில் இருக்கும் மெசஞ்சர் ஆப் போல கொடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo