வாட்ஸ்அப்பில் இப்படி போட்டோ அனுப்பினால் நல்லா இருக்கும்.

HIGHLIGHTS

உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது

வாட்ஸ்அப்பை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

வாட்ஸ்அப்பில் இப்படி போட்டோ அனுப்பினால் நல்லா இருக்கும்.

உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதில் தரப்பட்டுள்ள எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்ப முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வாட்ஸ்அப் பிரிவிவ் அம்சம்

அவ்வாறு டாக்குமெண்டாக அனுப்பும்போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை டவுன்லோட் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். 

இந்த அம்சத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்பலாம். இதன்மூலம் அந்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். 

இந்த அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பில் லிங்க்கை பகிரும்போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு தரப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile