ஊருல பாதி பேருக்கு இது தெரியாது WhatsApp பேக்கப்புக்கு இதை அவசியம் செஞ்சே ஆகணும்
WhatsApp Chat Backup End to End Encryption: end-to-end encryption இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் பொதுவாக வாட்ஸ்அப் சேட் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கருதுகின்றனர். இருப்பினும், இதில் உள்ள ஒரு முக்கியத் திருப்பம் என்னவென்றால் உங்கள் சேட்களை Google Drive அல்லது iCloud யில் பேக்கப் செய்யும்போது அவை தானாகவே என்கிரிப்ட் அல்லது லாக் செய்யப்படுபவதில்லை. உங்கள் பேக்கப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் ஆன் செய்ய வேண்டும்.
SurveyWhatsApp Hacks: வாட்ஸ்அப் சேட்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கு End-to-end encryption இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இந்த செட்டிங் சேட் பேக்கப்களுக்கும் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அதை சேட்டிங்களுக்குள் இயக்கினால் மட்டும் போதும். உங்கள் வாட்ஸ்அப் சேட் பேக்கப்களுக்கு முழுமையான எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இயக்குவது என்பது உங்கள் டேட்டாக்கு ஒரு டிஜிட்டல் லாக் இடுவதற்குச் சமம். Meta AI யின் படி வாட்ஸ்ப்பில் சேட் பேக்கப்களுக்கு முழுமையான எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் இயக்கப்படாவிட்டாலும் உங்கள் சேட் ஆப்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும். அதாவது, மெட்டா அல்லது வாட்ஸ்அப் உட்பட யாராலும் அவற்றைப் படிக்க முடியாது. இருப்பினும், பேக்கப்களுக்கு இந்த சேட்டிங் இயக்கப்படவில்லை என்றால் உங்கள் சேட்களை Google Drive அல்லது iCloud (iPhone) யில் பேக்கப் செய்யும்போது அவை இயல்பாகவே முழுமையாக பை டீபால்ட் அல்லது எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுவதில்லை. இந்த சேட்டிங் நீங்கள் ஆன் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Google யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்
சேட் பேக்கப்களுக்கு முழுமையான எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் ஏன் அவசியமாகிறது?
- உங்கள் சேட்களை யாராலும் படிக்க முடியாது. சேட்களைப் பாதுகாத்து வைப்பதற்கு நீங்கள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் செயல்படுத்தாவிட்டால் உங்கள் பைல்களை Google Drive அல்லது iCloud அணுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஒருமுறை எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் செயல்படுத்தப்பட்டுவிட்டால் உங்கள் பேக்கப் ஒரு பாஸ்வர்ட் அல்லது 64 எண் கீ மூலம் லாக் செய்யவும். Google, Apple அல்லது WhatsApp இந்த மூன்றில் எவராலும் அதை வாசிக்க இயலாது.
- கிளவுட் யில் பாதுகாப்பிற்கு எக்ஸ்ட்ரா லேயர்
உங்கள் Google அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டால் உங்கள் WhatsApp சேட்களும் லீக் ஆகிவிடும். இருப்பினும், என்க்ரிப்ஷன் இயக்கப்பட்டிருந்தால் உங்கள் Google Drive ஊடுருவலுக்கு உள்ளானாலும் கூட உங்கள் சேட்கள் வெறும் Garbage Code ஆக தோன்றும். பாஸ்வர்ட் இல்லாமல் அவற்றை அணுகுவது சாத்தியமற்றது.
இதை எப்படி ஆனில் வைக்கவேண்டும்?
- இந்த சேட்டிங் பயன்படுத்த நீங்கள் முதலில் WhatsApp ஓபன் செய்ய வேண்டும்.
- அடுத்து Profile ஐகானுக்குச் செல்லவும்.
- பின்னர் Chats ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு Chat Backup கிளிக் செய்யவும்.
- இறுதியாக, End-to-end encryption என்பதற்கு அருகில் உள்ள பட்டன் ஆன் செய்யவும்.
Passkey பயன்படுத்துங்கள்
உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் வழங்கப்படும்: நீங்கள் ஒரு புதிய பாஸ்வர்ட் உருவாக்கலாம் அல்லது Passkey பயன்படுத்தி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கலாம். இதன் மூலம், உங்கள் WhatsApp சேட் பேக்கப்களுக்கு பாதுகாப்பாகவே இருக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile