இந்தியாவில் Telegram தடை குறித்து Pavel Durov கருத்து, ரிலையன்ஸ் மற்றும் WhatsApp இருக்கலாம்

HIGHLIGHTS

இந்தியாவில் அரசு தற்காலிகமாக Telegram ஜூன் 22, 2026 வரை தடை விதித்துள்ளது

இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணம் NEET (UG) 2026 வினா லீக் சீய்யப்பட்டதாகும்.

அதிகாரி பாவெல் துரோவ், இந்த முடிவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்

இந்தியாவில் அரசு தற்காலிகமாக Telegram ஜூன் 22, 2026 வரை தடை விதித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணம் NEET (UG) 2026 மறு வனா லீக் செய்யப்பட்டதுடன் விற்பனை செய்யப்பட்ட காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பாவெல் துரோவ், இந்த முடிவை பகிரங்கமாக விமர்சித்ததோடு, வாட்ஸ்அப் மற்றும் ரிலையன்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், இந்தியாவிற்கு வெளியே உள்ள பயனர்கள் டெலிகிராமை அணுகுவதை ரிலையன்ஸ் சீர்குலைப்பதாக துரோவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனம் BGP ஹைஜாக்கிங் எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

Pavel Durov X தளத்தில் பதிவு

Pavel Durov X தளத்தின் போஸ்ட் படி இந்திய “இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ், BGP ஹைஜாக்கிங் எனப்படும் ஒரு முறையற்ற வழிமுறையின் மூலம், இந்தியாவிற்கு வெளியே (UAE அமீரகம் உட்பட) உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலைச் சீர்குலைத்து வருகிறது,” என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். “ரிலையன்ஸ் பல புகார்களைப் புறக்கணித்துள்ளதால், இந்தச் சீர்குலைப்பு வேண்டுமென்றே செய்யப்படுவதாகத் தெரிகிறது.”

மேலும் அவர் அதிகரித்து வரும் போட்டியின் போரின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என Durov கூறியுள்ளார் அதாவது ரிலையன்ஸ் உடன் சேர்ந்து Meta-க்கு சொந்தமான WhatsApp இதன் பின்னல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வழித்தடக் கடத்தல்களைத் தடுக்கவும், தங்கள் பயனர்களுக்கு நிலையான இன்டர்நெட் அக்சஸ் உறுதி செய்யவும், ரிலையன்ஸிடமிருந்து வரும் அங்கீகரிக்கப்படாத BGP அறிவிப்புகளை (AS18101) நிராகரிக்குமாறு நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய இன்டர்நெட் வழித்தடத்தின் இத்தகைய தவறான பயன்பாடு கவலை அளிக்கிறது.

இந்தியாவில் டெலிகிராமைத் தடை செய்வதற்கான சமீபத்திய பரப்புரை முயற்சிக்குப் பின்னாலும் ரிலையன்ஸ்/வாட்ஸ்அப் இருக்கலாம் என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என்று கூறினார்

இதையும் படிங்க Telgram இந்தியாவில் இந்த தேதி வரை தடை NEET (UG) தேர்வுக்கு வந்த சோதனை மீண்டும் தேர்வு

இதை தவிர மேலும் ஒரு தனி போஸ்ட்டில் இந்திய IT மினிஸ்ட்ரி எக்ஸாம் பேப்பரை லீக் செய்யப்பட்ட காரனத்திற்காக ஒரு வாரத்திற்க்கு டெலிக்ராம் தடை செய்யப்பட்டுள்ளது தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் எந்தப் பங்கும் இல்லாத லட்சக்கணக்கான சாதாரண பயனர்களை இந்தத் தடை “தண்டிக்கிறது” என்றும் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குறிப்பிட்டார். “இது தேர்வு தொடர்பான ஆவணங்களை லீக் செய்யப்பட்ட உள்ளாட்களை அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத் தண்டிக்கிறது,” என்று அவர் தனது பதிவில் எழுதியுள்ளார்.

Telegram இந்தியாவில் தடை விதிக்க காரணம் என்ன ?

ஜூன் 21 அன்று நடைபெறவிருந்த நீட் (UG) 2026 மறுதேர்வில் பங்கேற்கும் தேர்வர்களைக் குறிவைத்து, மோசடி செய்துள்ள காரனத்திற்காக டெலிகிராம் தளத்தைப் பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகிராம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பல டெலிகிராம் சேனல்கள் தேர்வுத் தாள்களை விற்று, தேர்வர்களிடம் சில ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தடையை தேசிய தேர்வு முகமை (NTA) பரிந்துரைத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-யின் கீழ் MeitY அமல்படுத்தியது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :