_Redmi Turbo 5
Redmi சமிபத்தில் அதாவது செவ்வாய் கிழமை அதன் புதிய Redmi Turbo 5 போனை அறிமுகம் செய்தது, இந்த போனை வாங்க காத்திருப்பவர்கள் இன்று இ-காமர்ஸ் தளமான அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், இந்த போனில் MediaTek Dimensity 8000 சிப்செட் மற்றும் 7,540mAh வரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Redmi Turbo 5- ஜூன் 19 ஆன இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இந்த போனின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,37,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே அதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,40,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேங்க் ஆபருக்கு பிறகு 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம்
மேலும் இதில் அறிமுக சலுகையாக SBI, ICICI பேங்க் மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ,2,000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை நீங்கள் பெறலாம்.இந்தியாவில். இந்த ஸ்மார்ட்போனை Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White போன்ற அற்புதமான கலர்களில் தேர்வுகளில் நீங்கள் வாங்கலாம்.
இதையும் படிங்க:ஆஃபர்லயே இது தான் சூப்பர், MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ, 9,000 மிக பெரிய டிஸ்கவுண்ட்
Redmi Turbo 5 5G, 6.59-இன்ச் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் பேனல் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி டர்போ 5 5ஜி, MediaTek Dimensity 8500 Ultra SoC மூலம் இயக்கப்படுகிறது . இது 12GB வரையிலான ரேம் (LPDDR5X ரேம்) மற்றும் 256GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் 50MP ப்ரைமரி OIS + EIS சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.
ரெட்மி டர்போ 5 5ஜி, 100W ஃபாஸ்ட்-சார்ஜிங் சப்போர்டுடன் 7540mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த விலைப் பிரிவில் 100W ஃபாஸ்ட்-சார்ஜிங் என்பது பாராட்டத்தக்கது. இந்தச் போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய IP ரேட்டிங்க்களை கொண்டுள்ளது. இது விண்வெளித் தரத்திலான மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிர பயன்பாட்டின் போதும் ஃபோனைக் கூளிங்காக வைத்திருக்க, இதில் 3D ஐஸ்-லூப் கூலிங் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ப்ளாக், வைட் மற்றும் லைட் கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.