இந்தியாவில் PUBG கேம் கேமிற்கு தடை, முழு விவரங்களை பற்றி பார்ப்போம் வாங்க..

HIGHLIGHTS

47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ள

இந்தியாவில்  PUBG  கேம்  கேமிற்கு தடை, முழு விவரங்களை பற்றி பார்ப்போம் வாங்க..

இந்தியாவில் கடந்த மாதம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
 
புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது.  இந்த செயலிகள் ஜூன் 29 ஆம் தேதி தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் அல்லது அதற்கான மாற்றானவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த செயலிகள் பட்டியலில் அலிபாபா குழுமத்தின் பப்ஜி மொபைல் இடம்பெற்று இருக்கிறது. பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் இந்திய பயனர்களின் விவரங்களை அந்நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இவற்றில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. தற்சமயம் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. 47 சீன செயலிகள் மட்டுமின்றி 250 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo