இன்ஸ்டகிராமில் இனி போலி மெசேஜை கண்டுபிடிப்பது இப்பொழுது இன்னும் எளிதாகிடும்.

HIGHLIGHTS

போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது

இன்ஸ்டகிராமில்  இனி  போலி மெசேஜை கண்டுபிடிப்பது இப்பொழுது இன்னும் எளிதாகிடும்.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி இருக்கிறது. போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது. புதிய கூட்டணியின் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை குழுக்கள் மேற்கொள்கின்றன.போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதேபோன்ற அம்சம் ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியும் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு அம்சங்களில் முதலாவது அம்சம் கொண்டு ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

இத்துடன் தவறான தகவலை அணுக வாடிக்கையாளர்களுக்கு ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும் “See Why” எனும் அம்சமும், பதிவினை பார்க்க வழி செய்யும் “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட தகவலை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இயக்க வழி செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile