TikTok போட்டியாக கொண்டுவரும் பேஸ்புக்கில் புதிய ஆப்.

TikTok  போட்டியாக கொண்டுவரும் பேஸ்புக்கில்  புதிய ஆப்.
HIGHLIGHTS

நிறுவனமும் அது போன்ற ஒரு செயலியை உருவாக்குவதில் தீவிரமாக வேலையை செய்து வருகிறது.

உலகளவில் 50 கோடிக்கு அதிகமான மக்கள் இந்த  டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்து வந்துள்ளார்கள், மேலும் இந்த டிக் டாக்  ஆப் டவுன்லோடு  செய்வது நாளுக்கு நாள் அதிகிறக்கதே தவிர  அது குறையவில்லை இதனை கண்ட பேஸ்புக் நிறுவனம்  அதற்க்கு  சவாலாக இருக்கும் வகையில் பேஸ்புக்  நிறுவனமும் அது போன்ற ஒரு செயலியை உருவாக்குவதில்  தீவிரமாக  வேலையை  செய்து வருகிறது.

டிக்டாக் நகர புரங்கள் மட்டுமில்லாமல்  கிராம புறத்திலும்  இந்த செயலியை பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாத அளவுக்கு பல அசுர வளர்ச்சியை கொண்டுள்ளது, மேலும் ஸ்மார்ட்போன்  வைத்திருக்கிறார்கள் என்றால்  அதில் இந்த ஆப் பற்றி தெரியாத அளவுக்கு பரவியுள்ளது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த டாக்கை பெருமளவு பயன்படுத்தி சிறிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர், மேலும் அதை ஷேர் செய்யும் வசதி உள்ளதால் பேஸ்புக்கிலும்  இந்த வீடியோக்களை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

வரவேற்பு அதிகம் உள்ள அதே நிலையில் சர்ச்சைகளையும் டிக் டாக் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதாகவும், சிறியவர்கள் மனதில் நஞ்சு விதைப்பதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதில் டிக் டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதை நீக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. 

இதன்பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு மீண்டும் டிக் டாக் களத்திற்கு வந்தது. இந்த நிலையில் அதேபோன்றதொரு ஆப் உருவாக்க பேஸ்புக் தீவிரம் காட்டி வருகிறது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் சிறிய வீடியோக்கள் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருந்த ஜேசன் டாபை பேஸ்புக் பணிக்கு எடுத்துள்ளது. பேஸ்புக்கில் அவருக்கு உற்பத்தி பிரிவின் தலைமை நிர்வாகி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் டிக் டாக் போன்றதொரு செயலியை உருவாக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதிய ஆப் உருவாக்கப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo