Facebook யில் எனிமேட்டட் Avatars, மகிழ்ச்சியில் பயனர்கள் கொண்டாட்டம்.

HIGHLIGHTS

. 'Avatars' என்ற புதிய அம்சம் பேஸ்புக் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது

பேஸ்புக் நிறுவனத்தின் அவதார்ஸ் அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு மெசஞ்சர் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

Facebook யில் எனிமேட்டட் Avatars, மகிழ்ச்சியில் பயனர்கள் கொண்டாட்டம்.

சமூக ஊடக தளம் பேஸ்புக் பயனர்களுக்கு ஒரு வேடிக்கையான அம்சத்தை கொண்டு வந்துள்ளது, இது அவர்களின் சொந்த வரஜுவல் கார்ட்டூன் அல்லது அனிமேஷன் பாத்திரத்தை உருவாக்க அனுமதிக்கிறது. 'Avatars' என்ற புதிய அம்சம் பேஸ்புக் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் ஏராளமான பயனர்கள் அதன் உதவியுடன் தங்கள் சொந்த தன்மையை வடிவமைத்து வருகின்றனர். உலகின் இரண்டாவது பெரிய சந்தையான இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த விருப்பத்தை பேஸ்புக் வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேஸ்புக் நிறுவனத்தின் அவதார்ஸ் அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களது உருவத்தின் கார்டூன் போன்ற வடிவத்தை உருவாக்க முடியும். பயனர்கள் பேஸ்புக் அவதார்ஸ் சேவையில் கிடைக்கும் வெவ்வேறு முகங்கள், தலைமுடி அலங்காரங்கள் மற்றும் உடை உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய முடியும்.

இந்த அம்சம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். அவதார்ஸ் கொண்டு பயனர்கள் அவர்களது டிஜிட்டல் உருவத்தை வடிவமைத்து, அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக் அவதார்

தற்தமயம் பேஸ்புக் அவதார் அம்சம் ஆண்ட்ராய்டு மெசஞ்சர் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் ஆப்பிள் ஐஒஎஸ் பதிப்பிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பயனர்கள் உருவாக்கும் அவதார்களை பேஸ்புக் கமென்ட், ஸ்டோரீஸ், ப்ரோபைல் படம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் சாட் விண்டோ உள்ளிட்டவற்றில் பயன்படுத்தலாம். இத்துடன் இவற்றை வாட்ஸ்அப் சாட்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். அவதார்ஸ் அம்சத்தை பயனர்கள் ஃபேஸ்புக் செயலியின் புக்மார்க்ஸ் பகுதியில் இயக்க முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo