Whatsapp வெப் டார்க் மோட் வசதி அறிமுகம்

HIGHLIGHTS

வாட்ஸ்அப் வெப் சேவையில் ஒருவழியாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ளலாம்

Whatsapp  வெப்  டார்க் மோட்  வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் சேவையில் ஒருவழியாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.
 
இதற்கு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கி உள்ளது. முன்னதாக இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. வாட்ஸ்அப் வெப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியை பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

கம்பியூட்டரில் வாட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும், தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ளலாம். 

வாட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்களில் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், QR  கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile