Apple WWDC Mac OS பல் அசத்தலான அப்டேட்கள்

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் சார்ந்த புது அறிவிப்புகளை வெளியிடும்

புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது

மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

Apple  WWDC Mac OS பல் அசத்தலான அப்டேட்கள்

ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் சார்ந்த புது அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேச டெவலப்பர்கள் (WWDC) நிகழ்வு துவங்கியது. ஆப்பிள் வழக்கப்படி அசத்தலான அறிமுக வீடியோவுடன் 2021 WWDC நிகழ்வு துவங்கியது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 டிம் குக் 

 ஆப்பிள் WWDC 21 நிகழ்வின் துவக்க உரையில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மேற்கொண்டார். தொடக்க உரையில், ஆப்பிள் டெவலப்பர்களுக்கு வழங்கும் புது சேவைகளை பற்றி விளக்கினார். 

அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

துவக்க உரையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின்  மென்பொருள் பொறியியல் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெடரிகி ஐஒஎஸ் 15 வழங்கும் புது அம்சங்களை விவரித்தார்.

 ஐமெசேஜ் 

இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய அனுமதிக்கிறது.

 ஆப்பிள் மேப்ஸ் 

ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்துகிறது. இது ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்படுகிறது.

ஐபேட் ஒஎஸ் 15

ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கு ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளே கிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டது. 

இதில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

பிரைவசி

இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

வாட்ச் ஒஎஸ் 8

புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேக் ஒஎஸ் 

மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் தளங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

ஆப் ஸ்டோர் துவங்கியது முதல் ஆப்பிள் டெவலப்பர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை க்ரியாக் விவரித்தார். மேலும் இன்று அறிவிக்கப்பட்ட புது ஒஎஸ் பீட்டா வெர்ஷன் இன்று முதல் கிடைக்கும் என டிம் குக் தெரிவித்தார். இவற்றின் பொது பீட்டா அடுத்த மாதமும், இதைத் தொடர்ந்து அனைவருக்குமான ஸ்டேபில் ஒஎஸ் சில மாதங்களில் வெளியாகும் என கூறி நிகழ்வை டிம் குக் நிறைவு செய்தார்.

புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் அனுபவம் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile