கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 12L அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
இந்த ஆண்ட்ராய்டு 12L அப்டேட் பழைய Pixel 3a முதல் Pixel 5a வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிற பிக்சல் போன்களுக்கும் புதிய அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக வாய்ஸ் கால்களுக்கு நேரடி கேப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கு முன் வீடியோக்களுக்கு மட்டுமே நேரடி கேப்ஷன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், வாய்ஸ் கால்களில் மற்றவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதையும் நாம் திரையில் வார்த்தைகளாக காணலாம். காது கேளாதோருக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
வாய்ஸ் கால்களுக்கு நேரடி கேப்ஷன்
புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பேட்டரி திறன், எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் இந்த விட்ஜெட்டில் காட்டப்படும்.
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile