பாஸ்வர்ட் தெரிஞ்சாலும் உங்களை தவிர உங்க அக்கவுண்டை யாராலும் தொட முடியாது.

HIGHLIGHTS

பாஸ்வர்ட் தெரிந்தாலும் இப்போது உங்கள் கணக்கை யாரும் திறக்க முடியாது

பாஸ்வர்ட் தெரிந்தாலும் இப்போது உங்கள் கணக்கை யாரும் திறக்க முடியாது

கூகிள் 2-படி வெரிஃபிகேஷன் அமைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்

பாஸ்வர்ட் தெரிஞ்சாலும் உங்களை தவிர உங்க அக்கவுண்டை  யாராலும் தொட முடியாது.

சில காரணங்களால் உங்கள் பாஸ்வர்ட் திருடப்பட்டதாக நீங்கள் நினைத்தால், அல்லது தற்செயலாக உங்கள் பாஸ்வர்டை ஒருவருக்கு வெளிப்படுத்தியிருந்தால், பயப்பட வேண்டாம்! பாஸ்வர்ட் தெரிந்தாலும் இப்போது உங்கள் கணக்கை யாரும் திறக்க முடியாது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மற்றும் அனைத்து கூகுள் கணக்குகளையும் இன்னும் பாதுகாப்பாக வைக்க நீங்கள் கூகுள் 2-படி வெரிஃபிகேஷன்  பயன்படுத்தலாம், இது மிகவும் எளிதான வழியாகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகிள் 2-படி வெரிஃபிகேஷன்  அமைப்பதற்கான சில எளிய வழிமுறைகள் இங்கே உள்ளன, உங்கள் கணக்குகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவற்றைப் பயன்படுத்தலாம்

  • Google 2-ஸ்டேப்  வெரிஃபிகேஷன் பக்கத்திற்குச் செல்லவும்
  • பின்னர் ஸ்டார்ட்  செட்டப்பில் கிளிக் செய்யவும்
  • இங்கே உங்கள் மொபைல் எண் கேட்கப்படும், அதை இங்கே உள்ளிடவும். இந்த மொபைல் எண்ணுக்கு ஒரு பாதுகாப்பு கோட் அனுப்பப்படும்
  • இப்போது நீங்கள் கோட் இருக்க விரும்பும் அதில் டிக் செய்யவும் அதாவது மெசேஜ்  மற்றும் வொய்ஸ்  கால் 
  • பின்னர் சென்ட்  கோடில் கிளிக் செய்யவும்
  • இதை கிளிக் செய்தால், உங்கள் மொபைலுக்கு 6 இலக்க குறியீடு அனுப்பப்படும்.
  • இந்த கோடை இங்கே உள்ளிட்டு வெரிஃபை  பட்டனை கிளிக் செய்யவும்
  • இப்போது கன்போர்ம் பட்டனை கிளிக் செய்யவும்
  • இதற்குப் பிறகு, உங்கள் அக்கவுண்டில் 2-படி வெரிஃபிகேஷன் அமைக்கப்படும், அது உங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால், அதை Turn Off பட்டனை  கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு, உங்கள் கூகுள் கணக்கைத் திறக்கும்போதெல்லாம், உங்கள் மொபைலில் ஒரு மெசேஜ் கோட் வரும், சரியான கோடை உள்ளிட்ட பின்னரே நீங்கள் உங்கள் கணக்கைத் திறக்க முடியும், அது உங்களுக்கு சற்று சிக்கலானதாக இருக்கலாம் ஆனால் அதன் பிறகு உங்கள் அக்கவுண்ட் மிகவும் பாதுகாப்பானது உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் அக்கவுண்டை யாரும் திறக்க முடியாது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile