inverter ஸ்மார்ட் AC இந்தியாவில் 22 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகமானது.

inverter ஸ்மார்ட் AC இந்தியாவில் 22 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகமானது.
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட் ஏசி மாடலை அறிமுகம் செய்துள்ளது

புதிய இகோ-டாப்பிக்கல் இன்வெர்ட்டர் ஏசி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் டிசிஎல் ஹோம் கம்பானியன் ஆப் வழங்கப்படுகிறது.

TCL எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் ஐஃபால்கான் பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் ஏசி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இகோ-டாப்பிக்கல் இன்வெர்ட்டர் ஏசி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 22999 விலையில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

ஐஃபால்கான் பிராண்டு புதிய ஏசி மாடல்கள் அதிகபட்சம் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் சீராக இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய ஏசி மாடல்கள் மிக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது.

புதிய இகோ-டாப்பிக்கல் இன்வெர்ட்டர் ஏசி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் டிசிஎல் ஹோம் கம்பானியன் ஆப் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களை இயக்க முடியும்.

இதுதவிர புதிய ஏசி மாடல்களில் சில்வர் ஐயன் ஃபில்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது கிருமிகளை கொல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆர்32 ரிஃப்ரிஜிரென்ட், டிஜிட்டல் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, 100 சதவீதம் காப்பர் டியூபிங் மற்றும் நான்கு வழிகளில் காற்றோட்டத்திற்கு வழி வகுக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo