ஆதார் பான் கார்ட் லிங்க் செய்வதற்க்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஜூன் 30 வரையில் அவகாசம் நீட்டிப்பு

ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 வரையில் அபராதம்

செர்வர் பிரச்சினை ஏற்பட்டது. பலரால் இணைக்க முடியாமல் போனது

கடந்த சில மாதங்களாக பான் கார்ட் ஆதார் உடன் லிங்க் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது லிங்க் செய்ய கடைசி நாளாக ஜூன் 30 , 2020வரை கொடுக்கப்பட்டது . ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தேதி நீட்டிக்கப்பட்டது, இப்போது ஆதார் கார்ட் மற்றும் பான் கார்டை இணைப்பதன் மூலம் 9 மாதங்கள் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டிருந்தது, மேலும் அதன் கடைசி நாள் மார்ச் 31,2021 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இன்னும் சிலர் ஆதார் பாண் கார்ட் லிங்க் செய்வதில் சிக்கல் இருப்பதால் மீண்டும் அதன் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது .

மார்ச் 31, கால அவகாசம் நிறைவடையும் சூழலில் இன்னும் பலர் ஆதாரை பான் கார்டுடன் இணைக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  கடைசி நாளில் நிறையப் பேர் ஆன்லைன் மூலமாக ஆதார் – பான் இணைப்புக்கு முயற்சித்ததால் செர்வர் பிரச்சினை ஏற்பட்டது. பலரால்  இணைக்க முடியாமல் போனது. கடந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த முறையும் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் – பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30  2021 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த வேண்டும். எனவே இன்றைய அறிவிப்பு இன்னும் இணைக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் – பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த வேண்டும். எனவே இன்றைய அறிவிப்பு இன்னும் இணைக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :