ஒரே நேரத்தில் 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்து சாம்பல் ஆகியது காரணம் என்ன?

HIGHLIGHTS

கடந்த சில மாதங்களாக மின்சார ஸ்கூட்டர்களில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது

EVயின் 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 20 ஸ்கூட்டர்கள் ஷோரூமுக்கு மொத்தமாக டெலிவரி செய்யும் போது தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது

ஒரே நேரத்தில் 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்து சாம்பல் ஆகியது காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக மின்சார ஸ்கூட்டர்களில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணையைத் தொடங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது, இப்போது நாட்டில் மற்றொரு தீ விபத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்டெய்னருக்குள் இருந்த ஜிதேந்திரா EVயின் 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 20 ஸ்கூட்டர்கள் ஷோரூமுக்கு மொத்தமாக டெலிவரி செய்யும் போது தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நல்ல விஷயம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பிரபல நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. இது மக்கள் மனதில் மின்சார வாகனங்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது ஒரே நாளில் டிரக் தீப்பிடித்ததால் 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நாசிக் அருகே 40 எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று தீப்பிடித்தது. இதில் 20 ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. இதன்பின் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி, தமிழகத்திலும் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், மறுநாள் மார்ச் 29 ஆம் தேதி, சென்னையில் ப்யூர் EV இன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது.

கடந்த மாதம், புனேவில் உள்ள ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலானது. லித்தியம்-அயன் பேட்டரியின் உள்ளே ஒரு ஷார்ட் சர்க்யூட்டின் எதிர்வினையான தெர்மல் ரன்வே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய அரசு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்த மின்சார வாகங்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை நீரில் தூக்கியெறிந்தாலும் தீ அணைவதில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது என கூறப்பட்டுள்ளது. காரணம் நீரில் லித்தியம் அயன் பேட்டரியை போடும்போது எலக்ட்ரோலைட்டில் உள்ள லித்தியம் குறைந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. இது அதிகம் தீப்பற்றக்கூடியது.

தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile