வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) பணம் எடுப்பது முன்பு ஒரு கடினமான வேலையாக இருந்தது; அது முதலாளியின் ஒப்புதல் மற்றும் நேரடி வெரிபிகேஷன் சார்ந்திருந்தது. இருப்பினும், இப்பொழுது இது போன்ற நிலைமை மாறியுள்ளது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), புதிய EPFO கட்டமைப்பின் கீழ் ஒரு டிஜிட்டல் ரெகுவஸ்ட் முறை மூலம் இந்தச் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இதன் பொருள், தகுதியுள்ள பயனர்கள் இப்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளியின் சான்றொப்பம் தேவையில்லாமல், PF பணம் எடுப்பதற்கான கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். உங்கள் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN), ஆதார், பான் மற்றும் வங்கி விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டிருந்தால், OTP அடிப்படையிலான வெரிபிகேஷன் பயன்படுத்தி EPFO மெம்பர் போர்ட்டலில் இந்தச் செயல்முறையை நேரடியாக முடிக்க முடியும்.
மெம்பர்களின் KYC விவரங்கள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டிருந்தால், முதலாளியின்(Employer) ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் ஆன்லைனில் PF பணத்தை எடுக்க EPFO அனுமதிக்கிறது. இது புதிய EPFO 3.0 கட்டமைப்புடன் ஒத்துப்போகிறது . முன்னதாக, பெரும்பாலான PF ரெகுவஸ்ட்களுக்கு முதலாளியின் சான்றளிப்பு கட்டாயமாக இருந்தது. இதனால், நிறுவனங்கள் ரெகுவஸ்ட்களுக்குப் பதிலளிக்காமல் அல்லது அவற்றைச் செயல்படுத்த மெதுவாக இருப்பதாகப் பலமுறை புகார்கள் வந்ததால், தாமதங்கள் ஏற்பட்டன.
இருப்பினும், சமூகப் பாதுகாப்பு முகமை ஆதார் லிங்க் வெரிபிகேஷன் இந்த அமைப்பில் ஒருங்கிணைத்துள்ளது. இதன்மூலம், EPFO இப்போது OTP அடிப்படையிலான முறையைப் பயன்படுத்திப் பயனர்களைச் சரிபார்க்க முடிகிறது.
வேலையளிப்பவரின் ஈடுபாடு இல்லாமல் ஆன்லைனில் பிஎஃப் பணம் எடுக்கத் தகுதி பெற, பயனர்கள் ஆதார் உடன் லிங்க் செய்யப்பட்ட , செயல்படுத்தப்பட்ட யுஏஎன் (UAN), பான் (PAN) மற்றும் வெரிபிகேஷன் செய்யப்பட்ட பேங்க் அக்கவுன்ட் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும். ரெகுவஸ்ட் செயல்முறையின் போது ஓடிபி (OTP) வெரிபிகேஷன் தேவைப்படுவதால், ஆதார் உடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பரும் செயலில் இருக்க வேண்டும். முழுமையற்ற கேஒய்சி (KYC) விவரங்களைக் கொண்ட பயனர்கள் அல்லது ஆஃப்லைனில் கோரிக்கை தாக்கல் செய்பவர்களுக்கு வேலையளிப்பவரின் சரிபார்ப்பு தேவைப்படலாம்.ரெகுவஸ்ட்
மேலும், வேலையை விட்டு விலகிய பிறகு முழுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பயனர்கள், EPFO இணையதளத்தில் தாங்கள் வேலையை விட்டு விலகிய தேதி சரியாகப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
EPFO தற்போது, வேலையளிப்பவரின் ஒப்புதல் இல்லாமலேயே, பயனர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. இதில், படிவம் 19 மூலம் முழுமையான PF திரும்பப் பெறுதல், படிவம் 10C மூலம் ஓய்வூதியத் திரும்பப் பெறுதல், மற்றும் படிவம் 31-ஐப் பயன்படுத்தி பகுதியளவு PF திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும். பிந்தையது, மருத்துவ அவசரநிலைகள், உயர்கல்வி, திருமணம், வீடு வாங்குதல், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது வீட்டைப் புதுப்பித்தல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க வீட்டிலிருந்த படி இலவசமாக Aadhaar கார்டில் Email id அப்டேட் எப்படி செய்வது பாருங்க ?