Google சர்ச்சில் உங்களின் போன் நம்பர்கள் , ஈமெயில் முகவரிகள், வீட்டு முகவரிகள், பேங்க் விவரங்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நம்பர்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சில சமயங்களில் வெப்சைட்டில் சர்ச் ரிசல்ட்களில் தோன்றக்கூடும். இந்தத் தகவல்கள் வெப்சைட்கள், டேட்டா தளங்கள், பொதுப் ரெக்கார்டின் பக்கங்கள் அல்லது பிற ஆன்லைன் மூலங்களில் வெளியிடப்படலாம். இதனால், மோசடி செய்பவர்கள், ஸ்பேமர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் இவற்றை எளிதாக அணுக முடிகிறது.
அதுவே நீங்கள் சர்ச் செய்த எல்லா தகவல்களையும் நீக்குவது கடினமாக இருந்தாலும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எங்கு தோன்றுகின்றன என்பதைக் கண்டறியவும், Google சர்ச் முடிவுகளிலிருந்து அவற்றை நீக்குமாறு கோரவும் உதவும் டுல்கள் ஏற்கனவே கூகிள் வழங்குகிறது. உங்கள் ஆன்லைன் தடயத்தைக் குறைத்து, சர்ச் முடிவுகளிலிருந்து தனிப்பட்ட தகவல்களை நீக்குவது எப்படி என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ.
ஏன் Google சர்ச் அம்சத்தை கவனிப்பது முக்கியம்
உங்களின் தனிப்பட்ட தகவல்கள ஆன்லைன்ல் தேடுவது மற்றும் பதிவிடுவது போன்றவை மிக பெரிய ஆபத்தில் கொண்டு முடியும் இதன் மூலமே பெரும்பாலும் பணம் மோசடி, ஸ்பேம் கால், மற்றும் தேவையற்ற கால் போன்ற தொல்லை நமக்கு வருகுகிறது
எனவே நீங்கள் எப்பொழுது உங்களின் தனிப்பட்ட தகவலை Google யின் டூல் தனிப்பட்ட அடையாளம் தகவல் (PII) தோன்றாமல் இருக்க உடனடியாக டெலிட் செய்வது நல்லது
Google search
உங்களின் தனிப்பட்ட தகவல் ஆன்லைனில் தெரிகிறதா என எப்படி செக் செய்வது?
உங்களின் தனிப்பட்ட தகவலை அழிக்கும் முன் உங்களின் தகவல் Google சர்ச்சில் தெரிகிறதா என்பதை முதலில் சரிபார்க்கவும்.
: கூகிளின் ‘உங்களைப் பற்றிய ரிஸல்ட் ‘ பக்கத்தைத் திறக்கவும், அதில் உங்கள் கூகுள் அக்கவுண்டை லோகின், முடிவுகள் ரிஸல்ட் உள்ள ‘About You page. பகுதிக்குச் செல்லவும்.
கூகிள் கண்காணிக்க விரும்பும் தகவலைச் சேர்க்கவும். பின்வரும் விவரங்களை உள்ளிடவும்::-
போன் நம்பர்கள்
ஈமெயில் முகவரிகள்
வீட்டு முகவரிகள்
அதன் பிறகு நீங்கள் எவ்வாறு லார்ட்ஸ் விரும்புகிறிர்கள் என்பதை தேர்ந்து எடுக்கவும்
ஈமெயில் நோட்டிபிகேஷன்
கூகிள் ஆப் நோட்டிபிகேஷன்
கூகிளின் ஸ்கேனுக்காகக் காத்திருக்கவும்
கூகிள் சர்ச் ரிஸல்ட்களை ஆய்வு செய்து, உங்கள் தகவல் வெப்சைட்டில் எங்கு தோன்றுகிறது என்பதைக் காட்டும் அறிக்கையை உருவாக்கும்.
கண்டறிதல்களை ரிவ்யூ செய்வதற்கும், எதிர்கால எச்சரிக்கைகளைக்
கண்காணிப்பதற்கும் நீங்கள் இந்தப் பக்கத்தை பின்னர் மீண்டும் பார்வையிடலாம்.
Google search (1)
Google சர்ச்சிலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவலை நேரடியாக நீக்குவது?
Google இப்பொழுது நேரடியாக சர்ச் ரிஸல்ட்டை அகற்ற அனுமதிக்கிறது அது எப்படி என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப் 1:-Googleதிறந்து மற்றும் சர்ச் ரிஸல்ட்டில் தனிப்பட்ட தகவல் தெரிகிறதா illaya என்பதை பார்க்கவும்.
ஸ்டேப் 2:- இப்பொழுது மெனு பக்கத்தில் செல்லவும், சர்ச் ரிஸல்ட் அருகில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
ஸ்டேப் 3:-Google சர்ச்சில் உங்களின் தகவல் தோன்றும் Result Remove என்பதை தட்டவும்
ஸ்டேப் 4 இப்பொழுது Google உங்களிடம் கேட்டும் என்ன காரனத்திற்காக Result அகற்ற வேண்டும் என அதில் இங்கு கொடுக்கப்படதை தேர்ந்து எடுக்கவும்.
Personal information is visible
Illegal content is involved
The search result is outdated
இந்த மூன்றில் எதாவது செலக்ட் செய்யவும் .
ஸ்டேப் 5:-இப்பொழுது நீங்கள் தேர்ந்து எடுத்த பிறகு உங்களின் அணைத்து தகவலையும் நீக்கப்படும், அதன் பிறகு கூகுள் உங்களுக்கு எக்ஷன் எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வரும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.