AEPS scam OTP இல்லாமலே பணம் அபேஸ் இது எப்படி நடக்கிறது இதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?

AEPS scam OTP இல்லாமலே பணம் அபேஸ் இது எப்படி நடக்கிறது இதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?

சைபர் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்து புதிய வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஒரு புதிய மோசடி முறைதான் AEPS மோசடி. இந்தத் திட்டத்தில், யாருடைய கார்ட் அல்லது OTPயோ தேவையின்றி, அவர்களின் பேங்க் அக்கவுண்டை காலி செய்ய முடியும். உண்மையில், இன்டர்நெட் மோசடிக்காரர்கள் NPCI வழங்கும் சிறப்பு AEPS சேவையைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சேவைக்கு பேங்க் பரிவர்த்தனைகளுக்கு கார்டையோ அல்லது OTPயோ தேவையில்லை. உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பயோமெட்ரிக்ஸை மட்டும் பயன்படுத்தி ஒரு அக்கவுன்டிலிருந்து மற்றொரு அக்கவுன்டிலிருந்து பணத்தை மாற்ற முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AEPS என்றால் என்ன, இந்த தவறு எப்படி நடக்கிறது ?

AEPS (Aadhaar Enabled Payment System) என்பது ஆதார் அடிபடையிலான பேமன்ட் சிஸ்டம் ஆகும். பயனர்கள் தங்கள் ஆதார் நம்பர் மற்றும் பிங்கர்ப்ரின்ட் அல்லது முக அங்கீகாரம் ( facial recognition) போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ட்ரேன்ஸ்செக்ஷன்களை மேற்கொள்ள பேங்கிங் சேவை அனுமதிக்கும்.

AEPS மோசடியைச் செய்வதற்கு, மோசடிக்காரர்களுக்கு உங்கள் ஆதார் நம்பரும் , சோசியல் மீடியாக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தெளிவான போட்டோ மட்டுமே தேவை. உங்கள் போட்டோவை பயன்படுத்தி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மூலம் ஒரு டீப்ஃபேக் வீடியோ உருவாக்கப்பட்டு, பின்னர் முக சரிபார்ப்பு மூலம் உங்கள் அக்கவுண்டை காலி செய்ய அது பயன்படுத்தப்படுகிறது.

AEPS ஸ்கேம் எப்படி நடைபெறுகிறது ?

  • முதலில் மோசடிக்காரர் உங்களின் ஆதார் தகவலை சேகரிக்கிறார்கள், உதாரணமாக ஆதார் நம்பர், மற்றும் நீங்கள் கவனக்குறைவாக ஷேர் செய்யும் தனிப்பட்ட டேட்டா.
  • இரண்டாவதாக உங்களின் போட்டோவை சேகரிக்கிறார்கள் அதாவது நீங்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் பப்ளிக் போட்டோ அவர்களுக்கு வர ப்ரசாதமாக அமைகிறது.
  • மூன்றாவது உங்களின் போலியான பயோமெட்ரிக் அடையாளம் உருவாக்குவது உதாரணமாக, ஸ்கேமர்கள் , ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் டூல்களை பயன்படுத்தி, உங்கள் போட்டோவில் அடிப்படையில் ஒரு போலியான முகத் தோற்றத்தையோ அல்லது பயோமெட்ரிக் தரவுகளையோ உருவாக்குகிறார்கள்.
  • நான்கவதாக தேவை இல்லாத முறையில் பணம் பறிப்பது ஆதார் விவரங்கள் மற்றும் போலி பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி, அவர்கள் AEPS அமைப்புகள் மூலம், OTP அல்லது உங்கள் நேரடி ஈடுபாடு இல்லாமலேயே உங்கள் பேங்க் அக்கவுன்டிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள்.

அதாவது பெரும்பாலான மக்கள் தங்கள் அக்கவுன்டிலிருந்து எந்த ஒரு அனுமதியுமின்றி பேங்க் அக்கவுண்டிளிருந்து பணம் பொய்இருப்பதை பேங்கிலிருந்து பேலன்ஸ் மெசேஜ்க்கு பிறகே தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த ஸ்கேம் மிகவும் ஆபத்தானது காரணம் என்ன தெரியுமா ?

  • இந்த புதிய மோசடியின் படி ஸ்கேமர்களுக்கு எந்த ஒரு OTP அல்லது PIN தேவை இல்லை
  • இதில் பாதிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பு ஈடுபடுவதில்லை.
  • இது அப்டேட் செய்யப்பட்ட ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மற்றும் பயோமெட்ரிக் ஸ்பூஃபிங் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
  • இது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அக்கவுண்ட்களை விரைவாகக் காலி செய்துவிடும்.

இது போன்ற பயோமெட்ரிக் சிஸ்டமின் படி மிகவும் ஆபத்தில் கொண்டு செல்கிறது

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், X செயலியில் AEPS மோசடிகளைத் தவிர்ப்பதற்கு இரண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி:
நீங்கள் AEPS சேவையைப் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் பேங்கை தொடர்புகொண்டு உங்கள் அக்கவுண்டிர்க்கான அந்தச் சேவையை முடக்கச் சொல்லுங்கள். இது மோசடி நடப்பதற்கான வாய்ப்பை நீக்குகிறது.

இதையும் படிங்க:டேட்டா லீக் என்றால் என்ன, இதில் நம்மை சிக்காமல் பாதுகாத்து கொள்வது எப்படி?

நீங்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்தினால், உங்கள் ஆதார் பயோமெட்ரிக் டேட்டாவை லோக் செய்யலாம் . தேவைப்படும்போதெல்லாம், ஆதார் செயலியிலிருந்து உங்கள் பயோமெட்ரிக் டேட்டாவை திறந்து, உங்கள் வேலை முடிந்ததும் மீண்டும் லோக்செய்து கொள்ளுங்கள். இது AEPS மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.

உங்களின் ஆதரை லோக் செய்வது அதாவது Masked Aadhaar பயன்படுத்துவவது நல்லது அதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

AEPS மோசடியிலிருந்து எப்படி தப்பிப்பது

  • எப்பொழுதும் நீங்கள் ஆதார் கார்டை ஷேர் செய்யும்போது Masked Aadhaar பயன்படுத்துவது நல்லது அதாவது கடைசி நான்கு நம்பர் மட்டுமே போதுமானது
  • உங்களின் பயோமெட்ரிக் டேட்டாவை UIDA சேவையை பயன்படுத்தி லோக் செய்வது நல்லது
  • உங்களின் பேங்க் ட்ரேன்ஸ்செக்ஷன் எப்பொழுதும் கண்காணிப்பது நல்லது உதாரமாக SMS மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட்
  • கடைசியாக செக்யூரிட்டி அம்சத்தை எனேபில் செய்யவும்.

உங்கள் ஆதார் லோக் அனலாக் செய்வது எப்படி?

  • உங்கள் ஆதார் பயோமெட்ரிக் டேட்டாவை லோக் செய்வதற்க்கு , உங்கள் போனில் புதிய UIDAI ஆதார் ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
  • பின்னர், உங்கள் ஆதார் நம்பரை பயன்படுத்தி ஆப்யில் லாகின் செய்யவும் .
    ஆப்யின் ஹோம் ஸ்க்ரீனில் ஆதார் QR கோடிற்kகு கீழே உள்ள ‘பயோமெட்ரிக்ஸ் திறக்கப்பட்டது’ .
  • இதற்குப் பிறகு, ‘ஆம், பயோமெட்ரிக்ஸைப் லோக் ‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
    உங்கள் ஸ்க்ரீனில் ‘பயோமெட்ரிக்ஸ் லோக் செய்வது போன்றவற்றை ‘ என்ற நோட்டிபிகேஷன் தோன்றும்.
  • இப்போது, ​​ஆப்யின் ஹோம் ஸ்க்ரீனில் உள்ள QR கொடிர்க்குள் கீழே ‘பயோமெட்ரிக்ஸ் லோக்’ செய்யப்பட்டுள்ளது (Biometrics Locked) என்ற விருப்பத்தை உங்களால் காண முடியும்.

உங்கள் பயோமெட்ரிக் லோக் அனலாக் செய்து கொள்ளலாம் அது எப்படி

  • நீங்கள் பயோமெட்ரிக் லொக்கை திறக்க விரும்பினால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, செயலியின் முகப்புப் பக்கத்தை அடைவதன் மூலம் அதைச் செய்யலாம்.
  • இதற்குப் பிறகு பயோமெட்ரிக்ஸ் பூட்டப்பட்டது (Biometrics Locked) ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • ஆம் என்பதைக் கிளிக் செய்து, பயோமெட்ரிக்ஸைத் திறக்கவும்.
  • இதற்குப் பிறகு உடனடியாக, உங்கள் திரையில் ‘Biometrics Unlocked’ என்ற பாப்-அப் தோன்றும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile