WhatsApp without username
WhatsApp யில் இதுவரை ஒருவரிடம் பேச வேண்டும் என்றால், மொபைல் நம்பர் ஷேர் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது, இதனால் ஒருவருவக்கு நமது நம்பரை ஷேர் செய்வது என்பது சங்கடமான விஷயமாக இருக்கலாம் இப்பொழுது உங்களுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும் அதாவது WABetaInfo அறிக்கையின் படி WhatsApp யின் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது இந்த அம்சத்தின் மூலம் நம்பர் இல்லாமல் வெறும் (Username) மூலம் யாரிடம் வேண்டுமானாலும் எளிதாக பேசலாம்.
அறிக்கையின்படி இந்த புதிய அம்சத்தை பற்றி உலக முழுதும் கொண்டு செல்ல இருக்கிறது மேலும் நம்பர் இல்லாமல் இந்த அம்சம் உங்கள் போன் நம்பரை பகிராமல் சேட் செய்ய உதவுகிறது. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த அம்சம் iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் செயல்படுகிறது.
உங்கள் பயனர்பெயரில் குறைந்தபட்சம் ஒரு எழுத்தாவது (a-z) இருக்க வேண்டும். நீங்கள் சிறிய எழுத்துக்கள், எண்கள், புள்ளிகள் (.), மற்றும் அடிக்கோடுகள் (_) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தலாம்.
பயனர்பெயரின் நீளம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.
உங்கள் பயனர்பெயரை ‘www.’ என்று தொடங்கவோ அல்லது ‘.com’ அல்லது ‘.net’ போன்ற வார்த்தைகளைக் கொண்டு முடிக்கவோ கூடாது
இதையும் படிங்க:தமிழ்நாடு எலெக்ஷன் நெருங்கியாச்சு வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா எப்படி செக் செய்வது ?